கம்பராமாயணம் 1007 · பால 16.5

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வண்டு உணக் கமழும் சுண்ணம் - (மகரந்தம்) உண்ணும் வண்டுகள் உண்ண விரும்புமாறு மணக்கும் சுண்ணப் பொடிகளை; வாசநெய் நானத்தோடும் கொண்டு - நறுமணமுள்ள தைலங்களோடும் கத்தூரியோடும் (கையிற்) கொண்டு; எதிர் வீசுவாரும் - (எதிர்) எதிராக வீசிக்கொள்வாரும்; கோதை கொண்டு ஓச்சுவாரும் - மலர்மாலைகளைக்கொண்டு வீசிக்கொள்ளுவாரும்; தூநீர் தொண்டை வாய்ப்பெய்து - தூய நீரினை கொவ்வைக்கனிபோன்ற (தம்) வாய்களிலே கொண்டு; கொழுநர்மேல் தூவுவாரும் - தங்கள் கணவர் மேல் தூவுகின்றவரும்; புண்டரீகக்கை கூப்பி - தாமரைமலர்கள் போன்ற (தம்) கைகளைக் குவித்து; புனல் முகந்து இறைக்கின்றாரும் - நீரை மொண்டு இறைக்கின்றவரும்.

“பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்” (திருக். ) ஆதலின், “தூநீர் தொண்டைவாய்ப் பெய்து கொழுநர்மேல் தூவுவாரும்” என்றார். “துப்பை வென்ற செந் துவர்இதழ்ச் செய்ய வாய்த் தூநீர் கொப்பளித்தனள்; ஆம்பல் அம்தேன் எனக் குடித்தான்” (திருவிளை. தருமிக்கு, 39) என்பார் பிறரும்.

“தொண்டைவாய்ப் பெய்து தூநீர் கொழுநர்மேல் தூவுவாரும்” என இருந்த படியே (கொண்டுகூட்டாமல்) கொண்டு, மகளிர் வாயில் நீரைப் பெய்து, நீரைத் தூய்மையாக்கிப் புனித நீராகக் கணவர்மேல் தெளித்தனர் எனவும் கொள்ளலாம். புனல்விளையாட்டில் சுண்ணமும் கோதையும் வீசலைச் சிந்தாமணி (2659)யும், பரிபாடலும் (9:39-40), கலித்தொகையும் (67:6; 128: 18-19) கூறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some took scented powder, so fragrant that bees long to feed on it, with perfumed oil and musk,
  2. and flung it at one another; some swung garlands at each other;
  3. some took pure water into mouths red as the toṇṭai fruit and sprayed it over their husbands;
  4. some cupped their lotus hands, scooped up the water and threw it.

What the poem says

The water-games go on. The lovers pelt each other with fragrant powder, scented oil and musk, and swing flower garlands at each other, games that older Tamil poems also describe at bathing festivals.

Some women fill their mouths with water and spray it over their husbands. The Tirukkuṟaḷ says the moisture of a loving woman's mouth is like milk mixed with honey, so the water becomes a sweet gift. Read another way, the water is purified by their lips and sprinkled on the husbands like holy water. Others simply scoop up water in their lotus-like hands and splash.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṭu uṇak kamaḻum cuṇṇam vāca ney nāṉattōṭum
koṇṭu etir vīcuvārum, kōtai koṇṭu ōccuvārum,
toṇṭai vāyp peytu tūnīr koḻunarmēl tūkiṉṟārum,
puṇṭarīkak kai kūppip puṉal mukantu iṟaikkiṉṟārum.