கம்பராமாயணம் 1018 · பால 16.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மிடல் உடைக் கொடிய வேலே என்ன - (ஆடவர் நெஞ்சில் ஊடுருவலில்) வலிமையுடைய கொடிய வேலே போன்று; வாள் மிளிர்வது என்ன - (ஒளிர்வதில்) வாள் (ஒன்று) மின்னுவதே போன்று; சுடர்முகத்து உலாவு கண்ணாள் - ஒளிர்கின்ற முகத்திலே உலாவுகின்ற இருகண்களையுடையவளாய்; தோகையர் சூழ நின்றாள் - மயில் அனைய மகளிர் சூழ்ந்து நிற்க (இடையே) நின்ற ஒருத்தி; மடல்உடைப் போது காட்டும் - இதழ்களையுடைய மலர்களைத் தோற்றுவிக்கும்; வளர்கொடி பலவும் சூழ - வளர்ச்சியுடைய கொடிகள் பலவும் சூழ்ந்திருக்க; கடலிடைத் தோன்றும் - திருப்பாற் கடலிலிருந்து வெளிவந்த; மென்பூங் கற்பக வல்லி ஒத்தாள் - மெல்லிய மலர்களைக்கொண்ட கற்பக வல்லியே போன்றிருந்தாள்.
மண்ணகத்து மலர்க் கொடிகளுக்கிடையே. விண்ணகத்து படர்கொடிகளாய் மகளிரிடையே அவள் விளங்கினாள் என்பதாம். கற்பகவல்லி - வான் உலகக் கற்பகத்தருவில் படரும் கொடி. “வேலே என்னலாய்” என்றும் பாடம். வேல், மகளிர் கண்ணிற்கு உவமை யாதல்: “ஓகயெ முருகன் கைவேல் ஓர் இரண்டு அனைய கண்ணாள்” (சீவக. 129). வேல், மகளிரின் நேரான பார்வைத் தாக்கிற்கும், வாள், பக்கங்களில் சுழன்று வீசும் தாக்கிற்கும் உவமையாம். இக்கண்களால் முகம் ஒளிபெறுகிறது என்பார், “சுடர் முகத்து உலவு கண்ணாள்” என்றார். தோகையர் பலரும் சூழநின்ற அவளுக்கு, கொடிகள் பல சூழநின்ற கற்பக வல்லி - இல்பொருள் உவமையாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With eyes like a cruel and mighty spear, like a flashing sword,
- roving in her radiant face, she stood with peacock-like maidens around her,
- and, ringed by many growing vines that put forth petalled blossoms,
- she was like the soft-flowered kaṟpaka creeper that rose out of the sea.
What the poem says
Another woman stands among her friends. Her eyes are a spear in the way they pierce straight through a man's heart, and a flashing sword in the way they sweep from side to side. They light up her whole face.
Among her companions she is like the kaṟpaka creeper, the wish-granting vine of heaven that came up out of the ocean of milk, with ordinary flowering vines around it. Since no such scene has ever been seen, the comparison is to something imagined.