கம்பராமாயணம் 1020 · பால 16.18

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலை கடந்த புயங்கள் - மலைகளையும் (வலிமையில்) வென்ற (ஆடவரின்) தோள்களோடு; கலைகடந்து அகல் மடந்தைமார் அல்குல் கடம்படு முலைகள் - ஆடைக்குள் அடங்காமல் அகன்றுள்ள பெண்டிரின் அல்குலும், குடங்களைப் போன்ற (அவர்) தனங்களும்; தந்தமில் முந்தி - ஒன்றுக்கொன்று முந்தி; நெருக்கலால் - மோத முற்படுவதால்; நீத்தம் நிலைகடந்து பரந்தது - (நீர்நிலையிலுள்ள) வெள்ளம் தன் நிலையைக் கடந்து (வெளியே) வழியில் ஆயிற்று.

புயங்கள் - புயங்களோடு - மூன்றன் தொகை. கொள் அளவிற்கு மேல் பொருள்களை இட்டால் நீர் வழிவது இயல்பு. இங்குக் கூறிய மூன்று உறுப்புக்களும் அளவிற் பெரியன எனக் கூறுதல் கவிமரபு ஆதலின், அவை மூன்றும் ஒன்றாய் நெருக்குதலின் “நிலை கடந்து பரந்தது நீத்தம்” என்றார். நீத்தம் - வெள்ளம்; அது இங்கு நீர் என்னும் அளவில் நின்றது. வழிந்தோடும் மிகுதியும் வேகமும் கொண்டு வெள்ளம் என்றார் எனினுமாம். “மலை கடந்த புயம்” என்பதனை மலைகள் தந்த புயம் எனக் கொள்ளினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The men's shoulders that surpass the mountains, and the women's
  2. broad hips that spill beyond their garments, and their breasts like pots,
  3. all crowding in, each pressing ahead of the others,
  4. made the flood spill over its bounds and spread.

What the poem says

A playful exaggeration. Poets always describe men's shoulders, women's hips and women's breasts as huge. When all of them crowd into the pools at once, the water has nowhere to go and overflows its banks, just as a vessel overflows when too much is put into it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malai kaṭanta puyaṅkaḷ, maṭantaimār
kalai kaṭantu akal alkul, kaṭam paṭu
mulaikaḷ, tamtamiṉ munti neruṅkalāl,
nilai kaṭantu parantatu nīttamē.