கம்பராமாயணம் 1031 · பால 16.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தள்ளி ஓடி அலை தடுமாறலால் - (நீராடலால் தம் நிலையிலிருந்து) தள்ளப்படுதலால், பரந்து சென்று அலைகள் தடுமாறுவதால்; தெள்ளு நீரின் - தெளிந்த (அந்த நீர் நிலையின்) தண்ணீரில்; மூழ்கு செந்தாமரை - மூழ்கிப் போகின்ற செந்தாமரை மலர்கள்; புள்ளி மான் அனையார் - புள்ளி மானைப் போன்ற அங்குள்ள மகளிருடைய; முகம் போல் கிலாது - முகங்களைப் போன்றிருக்க இயலாமையால்; உள்ளம் நாணி - மனத்திற்குள் வெட்கமுற்று; ஒளிப்பன போன்ற - (நீருக்குள்) மறைவன போன்றன. ஏ - அசை - தற்குறிப்பேற்ற அணி. தள்ளி ஓடி (அலைகள்) ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு ஓடி எனினுமாம். புனல் ஆடுவார் பலராதலால், அலைகள் எழுவதும் விழுவதுமாகப் பல ஆகின்றன. அதனால், ஆங்குள்ள தாமரைகள் முழுகுவதும் எழுவதுமாகத் தடுமாறுகின்றன. இதனை மனக் கண்ணாற் கண்ட கவி, புள்ளிமான் அனையார் முகம் போல்கிலாதது கண்டு உள்ளம் நாணி ஒளிப்பன போன்றிருந்தன என்று தன் கருத்தையேற்றி அழகூட்டினார் - தற்குறிப்பேற்ற அணி. நீரில் மூழ்கிய தாமரைகள் மீண்டும் வெளிப்படுமாதலின், மூழ்கின போன்றவே என்னாமல் “ஒளிப்பன போன்றவே” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the waves, pushed aside, ran off and tossed about,
- the red lotuses dipping under the clear water,
- unable to match the faces of the women, gentle as spotted deer,
- seemed to hide themselves, ashamed at heart.
What the poem says
With so many people bathing, the pools are full of choppy waves, and the red lotuses keep bobbing under the surface and coming up again.
The poet gives them a reason. They are ashamed that they cannot match the faces of the doe-eyed women, so they duck out of sight. He says "hide" rather than "sink" because they come up again a moment later. As before, the poet supplies a fanciful cause for something that really happens.