கம்பராமாயணம் 1036 · பால 17.1

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெண் நிற நறைநிறை - வெண்மையான நிறமுடைய கள்ளின்; வெள்ளம் என்னவும் - நிறைந்த வெள்ளம் (பெருகியது) போலவும்; பண்நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும் - இசையானது வடிவம் பெற்று உலகத்தில் இடையே பரவியது போலவும்; உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் - (எல்லா உயிர் இனங்களின்) உள்ளத்துள்ளே நிரம்பிய காமம் (உள்அடங்காமையால்) மிகுதிப்பட்டு வெளியிலே ஒழுகினாற் போலவும்; தண்நிறை நெடுநிலாத் தழைத்தது எங்கும் - குளிர்ச்சி பொருந்திய பெருநிலாவானது எல்லாவிடத்தும் (தன் ஒளியைச் செழிக்கச் செய்தது).

நிறத்தால் கள்; இனிமையால் இசை; இன்ப மிகுதியால் காமவெள்ளம் என்னலாம்படி நிலவொளி பரவிற்றென்க. இனிவரும் இப்படலப் பகுதியின் பொருள் எல்லாம் தோன்றுமாறு தொகுத்துத் தோற்றுவாய் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though it were a brimming flood of white toddy,
  2. as though music had thickened into colour and spread through the world,
  3. as though the desire filling every heart had overflowed and run out,
  4. the cool, full, far-spreading moonlight flourished everywhere.

What the poem says

This opens the canto of the drinking feast, in which Tacarataṉ's army and court, camped on their way to Mithilā, spend the night drinking and making love.

The moonlight floods everything. It is white like palm toddy, sweet like music made visible, and as full of delight as desire overflowing from every heart. These three images sum up what the canto will describe: wine, song and love.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṇ niṟa naṟai niṟai veḷḷam eṉṉavum,
paṇ niṟam ceṟintu iṭai parantatu eṉṉavum,
uḷ niṟai kāmam mikku oḻukiṟṟu eṉṉavum,
taṇ niṟai neṭu nilāt taḻaittatu eṅkumē.