கம்பராமாயணம் 1082 · பால 17.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊறுபேர் அன்பினாள் ஒருத்தி - மேன்மேல் சுரக்கின்ற பேரன்பினையுடையாள் ஒருமங்கை; தன் உயிர் மாறு இலாக்காதலன் செயலை - தன்னையன்றி வேறு உயிர் இல்லாதவன் ஆகிய (தன்) காதலன் செய்த (பிழைச்) செயல்களை; மற்று ஒரு நாறுபூங் கோதைபால் நவில நாணுவாள் - மணம் வீசும் மலர்மாலைகள் அணிந்த வேறொருத்தியினிடம் கூறுதற்கு, (அழைத்த பின் கூறாது) நாணம் உறுவாள்; வேறு வேறு உறச்சில மொழி விளம்புவாள் - (அழைத்தற்கு ஏதாவது பேசவேண்டுமே என்று) தொடர்பற்ற பல்வேறு சொற்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“தான் எவ்வம் கூரினும் நீ செய்த அருளின்மை, என்னையும் மறைத்தாள் என்தோழி; அது கேட்டு நின்னையாள் பிறர்முன்னர்ப் பழிகூறல் தான் நாணி” (கலி: . 8-10) எனும் சான்றோர் மொழியினைக் கற்றவள் ஆதலின் மற்றொரு கோதைபால் காதலன் செயலை நவில நாணினாள். அவளோடு ஏதாவது பேசவேண்டுமே என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேறு வேறு சொற்களைப் பேசிக்கொண்டிருந்தாள் என்றவாறு. “எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு” (திருக். 1298) எனும் வள்ளுவக் காதலி போன்றாள் இவள் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A woman of welling, boundless love, ashamed to tell
- what had been done by the lover who was one with her life, with no other,
- to another woman wearing a garland of fragrant flowers,
- spoke a few words instead, each about something else.
What the poem says
A loving wife has been wronged by her husband and calls a friend over to tell her. When it comes to it, she is ashamed to speak ill of him in front of someone else.
So, having called her friend, she chatters about this and that, one unconnected thing after another. Like the women of earlier Tamil love poetry, she protects her husband's name even from her closest friend.