கம்பராமாயணம் 1084 · பால 17.48

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி - மூங்கில் போன்ற தோளுடையாள் ஒரு மாது; வேந்தன் வந்து எதிர்தலும் - (ஊடல் உற்றிருந்த அவள்முன்) கணவன் வந்து எதிர் நின்றவுடன்; தன் மனம் எழுந்து முன் செல - (அவன்பால் உள்ள விருப்பத்தால் இவளையறியாது) இவள் மனம் எழுந்து அவன்பால் செல்ல; மதிமுகம் கதுமென வணங்கினாள் - (தன் மதியனைய வதனத்தை (சாய்த்து) அவன் எதிர்பாராத வண்ணம்) வணங்கி நின்றாள்; அது புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்தது - இப்படி வணங்கி நிற்பது, (இவளிடம் இது வரை காணாப்) புதுமையாதலின், (எத்தனை வெகுளியையுள்ளடக்கியதோ இவ்வணக்கம் என்று) அவனுக்குப் பெரியதோர் அச்சம் உண்டாயிற்று.

“மனைவி உயர்வும் கிழவோன் பணிவும், நினையுங் காலைப் புலவியுள் உரிய” (தொல். பொருள். 31) ஆதலின், மரபு மீறி மனைவி பணிந்த இப்புதுமை, பெரு வெகுளியின் குறியீடு எனக் கணவன் அஞ்சினன் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A woman with shoulders like bamboo, when her king came
  2. and stood before her, her heart rising and running ahead to meet him,
  3. suddenly bowed her moon-like face; and that,
  4. being something new, made fear blossom in him.

What the poem says

A wife has been sulking. When her husband comes in, her heart leaps out to him, and before she knows it she bows her head to him.

According to the old rules of love poetry, in a lovers' quarrel it is the husband who must humble himself and the wife who stands on her dignity. So her sudden bow is something he has never seen, and it frightens him. He wonders how much anger it hides.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vetir poru tōḷiṉāḷ orutti, vēntaṉ vantu
etirtalum, taṉ maṉam eḻuntu muṉ cela,
matimukam katumeṉa vaṇaṅkiṉāḷ; atu,
putumai, ātaliṉ, avaṟku accam pūttatē.