கம்பராமாயணம் 1130 · பால 18.28

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோல்வரும் செம்மையும் குடைவரும் தண்மையும் - அரசாளும் முறையில் பொருந்தின நீதியும், ஆளுகையில் (மக்கட்குக்) குளிர்ச்சி தரும் கருணையும்; சால்வரும் செல்வம் என்று உணர் பெருந்தாதை தன் - (தனக்கு) “மிகப் பொருந்திய செல்வம்” என்று உணர்கின்ற பெருமைக்குரிய தந்தையாகிய தயரத வேந்தருடைய, மேல்வரும் தன்மையால் - மேன்மையை நல்கும் பண்புகளால்; பொருவு இல் நான்மறை எனும் நடையினார் - ஒப்பில்லாத நான்கு வேதங்களே இந்நால்வரும் எனச் சொல்லத்தக்க ஒழுக்கத்தையுடையவராய்; தாம் மிக விளங்கினர் - நான்கு குமாரர்களும் (தந்தையைப் போலவே) (அங்கு) மிகச்சிறந்து விளங்கினர்.

தசரதன் தன் செல்வம் எனக் கருதியது தன்நாட்டு மக்களுக்குக் காட்டும் நீதியும் கருணையுமே. “சதுமறையெனக் குமரர்கள் வளர்ந்தனர்” என முன்பும் (கம்ப. 302) சுட்டுவார். “அலையாழியென வளர்ந்தார் மறைநான்கும் அனையார்கள்” (கம்ப. 659) என்பதும் காண்க. இனி, “சால்வரும் செல்வம்” என்றதற்கு ஊன்றுசாலில் இடப்பட்டவிதையின் குணம் கதிரிலும் அப்படியே விளைவது போல, கோல்வரும் செம்மையும் குடைவரும் தண்மையும் மக்கட்கும் அப்படியே விளைந்துள்ளன எனக் கொள்ளினும் ஆம். ஒப்பு. “உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன்பயனே” (புறம். 35).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The justice that comes with the sceptre and the coolness that comes with the parasol
  2. their great father knew to be his fitting wealth; and by
  3. the excellence they had from him, they shone out greatly,
  4. all four of them, walking like the four matchless Vedas.

What the poem says

The four princes stand together, shining with the virtues they inherited from their father. Tacarataṉ counted only two things as his real wealth: the justice of his sceptre and the cool, sheltering kindness of his royal parasol toward his people.

The brothers are compared to the four Vedas, a comparison the poet used of them earlier as well. Another reading says the father's justice and kindness have grown in the sons as a seed's nature reappears in the grain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōl varum cemmaiyum kuṭai varum taṇmaiyum
cāl varum celvam eṉṟu uṇar perun tātaitaṉ,
mēl varum taṉmaiyāl, mika viḷaṅkiṉarkaḷ tām,
nālvarum poru il nāṉmaṟai eṉum naṭaiyiṉār.