கம்பராமாயணம் 1141 · பால 19.5

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரத்தம் உண்டு அனைய மேனி அகலிகைக்கு அளித்த தாளும்,
விரைக் கரும் குழவி கு ஆக வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடம் தோளும் காண, மறுகினின் வீழும் மாதர்,
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ இனம் என்னல் ஆனர்.

பொருள் · Meaning in Tamil

அரத்தம் உண்டு அனையமேனி அகலிகைக்கு அளித்த தாளும் - செம்மையெனும் நிறத்தையே உணவாக உட்கொண்டாற்போன்ற (சிவந்த) வடிவினையுடைய அகலிகைக்கு அருளிய (இராமபிரானின்) திருவடிகளையும், விரைக் கரும் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும் வரைத்தடம் தோளும் - மணத்தோடு சேர்ந்த கருங்கூந்தலையுடைய சீதையைப்பெறுவதற்காக வில்லை ஒடித்து, உயர்ந்து பருத்த மலைபோன்ற தோள்களையும்; காண மறுகினில் வீழும் மாதர் - கண்டு களிப்பதற்கு (அரச) வீதியில் வந்து கூடுகின்ற மகளிர்; இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ இனம் என்னல் ஆனார் - ஒலியெழுப்பிய வாறு வந்து, அமிழ்தத்தில் மொய்க்கின்ற வண்டுகளின் கூட்டம் என்று உவமிக்கும்படியானார்கள்.

கோசிக முனிவன் மட்டும் கண்டு மகிழ்ந்த இராமபிரானின் கை வண்ணத்தையும் கால் வண்ணத்தையும் (கம்ப. 475), எல்லோரும் காணும் வாய்ப்பை, மிதிலை நல்கியுள்ளதால், வாய்ப்பை நழுவ விடாது, மிதிலை நகரத்துப் பெண்கள், அமிழ்தத்தை உண்ண மொய்க்கின்ற வண்டினம் போல, இராமபிரானின் அழகு எனும் அமிழ்தத்தை உண்டு திளைக்க மொய்த்தனர் என்க. அமிழ்தம் சாவாமைக்குக் காரணமாவது மட்டுமன்றிப் பெருஞ்சுவையும் நல்க வல்லது. இறைவன் அடிசார்ந்த உயிர்கள் அழியாநிலை எய்திப் பேரின்பம் உறுதலைக் குறிப்பால் அறிவித்தார். அகலிகைக்கும் சீதைக்கும் அருள் செய்ததாளும் தோளும், நாமும் பெண்களாதலால், நமக்கும் அருள் செய்தே தீரும் எனும் நினைவில் மகளிர் மொய்த்தார் எனினுமாம். அரத்தம் - சிவப்புநிறம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To see the feet that gave Akalikai back her body, red as if it had drunk in redness,
  2. and the great hill-like shoulders that swelled and rose to break the bow
  3. for the sake of the woman with fragrant dark hair, the women pouring into the street
  4. became like swarms of flies that come buzzing and cluster on nectar.

What the poem says

The women crowd in to see two things in particular: the feet whose touch restored Akalikai, the sage's wife turned to stone, to life, and the mountainous shoulders that broke the bow to win Cītai.

They swarm like insects drawn to nectar, the drink of immortality. The commentary hints that souls who reach God's feet gain undying bliss, and suggests the women may be thinking that feet and shoulders that showed grace to two women might show grace to them too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arattam uṇṭaṉaiya mēṉi akalikaikku aḷitta tāḷum,
viraik karuṅ kuḻalikkāka vil iṟa nimirntu vīṅkum
varait taṭan tōḷum kāṇa, maṟukiṉil vīḻum mātar,
iraittu vantu amiḻtiṉ moykkum ī iṉam eṉṉal āṉār.