கம்பராமாயணம் 1143 · பால 19.7

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவன் தேர் - இந்த இராமபிரானது தேர்; “எண்கடந்து அலகு இலாது இன்று ஏகுறும்” என்று - மன வேகத்திலும் மிகுந்து, (விரையும் வேகத்திற்கு) அளவே இல்லாமல், இப்பொழுது கண் கடந்து செல்கின்றது’ என்று கூறி; பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுங்காலை - (அந்நகரத்துப்) பெண்டிர் (கண்ணிலிருந்து இராமன் மறைவதற்கு) தங்களுக்குள் வருந்தி, மதிமயங்கும்போது; மண்கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை - (முன்பு திருவிக்கிரம அவதாரத்தில்) மண்ணை ஓரடியால் அளந்துவிட்டு, வானையும் ஓரடியால் அளந்து மூன்றாம் அடிக்கு இடம்கேட்டவனான அந்த இராமனை; தன்தன் கண் கடவாது காத்த காரிகை - தான், தனது கண்களை விட்டு நீங்கவிடாமல் பாதுகாத்துக்கொள்ள இருக்கிற சீதை; பெரியளே காண் - எல்லாரினும் பெரியவளே ஆவாள்! (என்றனர்).

ஓங்கி உலகளந்த பெரியரிற் பெரியனானவனை, தன் கண்களில் அடக்கிக் காப்பவளாகிய சானகி, அவனிலும் பெரியவளே என்று கவிஞர்பிரான், சமற்காரம் தோன்ற வியந்தவாறு. காண் - அசை. உலகளந்த தன் காதற் கொழுநனைத் தன் கண்வட்டத்தில் வைத்துக் காக்கும் வாய்ப்பினைப் பெற்றுவிட்ட சீதையின் பெரும்பேற்றினை எண்ணிப் பெண்மைக்குரிய வியப்புணர்வோடு பெருமூச்செறிந்தவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Past all reckoning, beyond all measure, his chariot is going by today!” so
  2. the women grieved among themselves and were bewildered; and at that moment,
  3. see how great is the lady who will keep within her own eyes, never letting him pass out of them,
  4. the one who strode past the earth and past the heaven where the immortals dwell!

What the poem says

Irāmaṉ's chariot moves on too fast, and the women lament as he passes out of their sight. Then they sigh at the thought of Cītai's good fortune.

As Trivikrama, Viṣṇu once measured the earth and the heavens in two strides, yet Cītai will hold this same immense being within the circle of her own eyes and never let him go. She must therefore be greater even than he is, a witty paradox spoken with very human envy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṇ kaṭantu alaku ilātu iṉṟu ēkuṟum ivaṉ tēr,' eṉṟu,
peṇkaḷ tamtammiṉ nontu pētuṟukiṉṟa kālai,
maṇ kaṭantu amarar vaikum vāṉ kaṭantāṉait tāṉ taṉ
kaṇ kaṭavātu kātta kārikai periyaḷē kāṇ!