கம்பராமாயணம் 1148 · பால 19.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்னையும் பொருவும் நீராள் - (மகளிற் சிறந்தவள் ஆகிய) திருமகளைத் தனக்கு உவமையாகக் கூறத்தக்கவள் ஆகிய ஒருத்தி, புனைந்தன எல்லாம் போக - தான் அணிந்திருந்த அணிகலன்கள் யாவற்றையும் தன் உடல் இளைப்பால் கழன்று போக விட்டு; தன்னையும் தாங்கலாதாள் - தன் உடலையும் தான் தாங்கும் வலிமையற்றவள் ஆகி நிற்கையில்; துகில் ஒன்றும் தாங்கிநின்றாள் - (மானம் மிக்கவள் ஆனபடியால்) தன் ஆடை ஒன்றைமட்டும் (அவ்வணிகள் போல்) நழுவி விடாதபடி தாங்கிப் பிடித்து நின்றாள்; சொல் நலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி - (அவள் அப்படிப் பிடித்துக் கொண்டு) சொல் நலத்தால் அகப்படாத அகப்பொருளாகிய காமத்தின் சுவை முழுவதற்கும் ஒருவடிவம் கொடுத்து; இன் நலம் தெரியவல்லார் எழுதியது என்ன நின்றாள் - இன்ப (நூல்) நலம் தெரிந்த வல்லவர்கள் எழுதிய ஓவிய வடிவம் இது என்னுமாறு நின்றாள்.
கட்புலனாகாத காமச்சுவையைக் கட்புலப்படுத்த வந்த உயிர் ஓவியம் அவள் என்க. அன்றைய ஓவியக்கலையின் ஆட்சியும் மானம் பேணலின் மாட்சியும் ஒருங்கு தெரிவித்த வாறு. சொல்லுக்குள் அகப்படாத சுவையுடையது காமச்சுவையே ஆதலின், “சொன்னலங்கடந்த காமச்சுவை” என்றார். அகம் என்று காதற்சுவை பெயர்பெறக் காரணமும் இதுவே என்பர். “மகட்குத்தாய் தன்மணாளனோடு ஆடிடும் சுகத்தைச் சொல் எனில் சொல்லுமாறு எங்ஙனே?”
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if those skilled in the beauty of delight had taken the taste of desire, which lies beyond the reach of words,
- and given it a single form and painted it, so she stood:
- a woman whose nature rivalled the goddess of gold, everything she wore slipping away,
- unable to hold up even herself, holding up only her one garment.
What the poem says
A woman as lovely as Tirumakaḷ, goddess of fortune, wastes so quickly with longing that her jewels slide off her. She can hardly stand, yet out of modesty she keeps a grip on her garment.
Standing like that, she looks like a painting made by masters of the art of love, giving visible form to the experience of desire, which words can never capture. The commentary notes that this is why love poetry is called akam, the inner.