கம்பராமாயணம் 1159 · பால 19.23

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மை தவழ்ந்த கருங்கண் ஓர் வாள் நுதல் - மை தீட்டப்பட்ட கரிய கண்களையும் ஒளி பொருந்திய நெற்றியையும்; செய் தவன் தனித்தேர் மிசைச் சேறல்விட்டு - தவமெல்லாம் செய்து முடித்த இந்த இராமன் தன் ஒப்பற்ற தேரின் மேல் செல்லுதலை விட்டுவிட்டு; தான் எய்த வந்து எதிர் நின்றமை தான் இது - என் கண் எதிரில் வந்து நிற்றலாகிய இது; கை தவம் கொல்? கனவு கொலோ? என்றாள் - மாயைதானோ? (அல்லது) கனவுக் காட்சிதானோ என்று வினாவினாள்.

ஆங்குள்ள அத்தனை பொருள்களும் மறைந்து இராமன் ஒருவன் மட்டுமே கண்ணில் படுவதால் மந்திரமோ? கனவோ? என மயங்க நேர்ந்தது. பக்தர் உலகம் இந்நிலையைத் “தீவிர பக்தி” என்னும். வாள்நுதல் - அன் மொழித் தொகை. “உருவின் மிக்கதோர் உடம்பது பெறுவது அரிது” (சீவக. சிந். 154) ஆகலான், இத்தகைய பேரழகைப் பெற்றிட இராமன் பெருந்தவம் புரிந்திருக்க வேண்டும் என்பாள் “செய்தவன்” என்றாள். இராமன், உருவம் உருவெளித் தோற்றமாய், இவள் கண்முன் நின்றான் ஆதலின் இவ்வாறு உரைத்தாள். கைதவம் - இழிந்த தவம்; வஞ்சனை; மாயை. என்னை இத்தகைய வேட்கை கொளச் செய்தவன் என்றும் பொருள் கொளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A woman with a bright brow and dark eyes rimmed with kohl said:
  2. “That he who has done such penance should give up riding on his matchless chariot
  3. and come up close and stand before me: this,
  4. is it a trick? Or is it a dream?”

What the poem says

This woman is so absorbed in Irāmaṉ that everything else vanishes, and his image seems to have left the chariot and come to stand right in front of her. She cannot tell whether it is magic or a dream. Devotional tradition would call this state intense devotion.

She calls him “one who has done penance” because only great austerities in past lives could earn such beauty. The phrase can also mean “the one who has done this to me,” the man who stirred such longing in her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mai tavaḻnta karuṅ kaṇ or vāṇutal,
'cey tavaṉ taṉit tērmicaic cēṟal viṭṭu,
eyta vantu, etir niṉṟamaitāṉ itu,
kaitavamkol? kaṉavukolō?' eṉṟāḷ.