கம்பராமாயணம் 1171 · பால 19.35

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மருள் மயங்கு மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன் - ‘இராமன் (ஆகிய) இவன் எது கேட்டாலும் தரவுள்ள மோக மயக்கில் உள்ள மகளிர் எவரிடத்திருந்தும் ஒரு பொருளையும் விரும்பாதவனாய்; இவன் போகின்றதே! - இவன் இப்படிப் போகின்றானே! (இது தகுமா?); கருணை என்பது கண்டறியான் - (இவன்) அருள் என்னும் (பெருங்) குணத்தின் தன்மையைச் (சிறிதும்) அனுபவித்து அறியானோ?; பெரும் பருணிதன்கொல்? - (மகளிரைச் சிறிதும் விரும்பாக் குணம்) பரிணமித்த சிறந்த ஞானியோ?; படுகொலையான் என்றாள் - (ஞானி மணந்து கொள்ளச் செல்லான்) ஆதலின் (இவன் பெண்களைக் கொல்லும்) படுகொலையாளனே ஆகல் வேண்டும் என்றாள் ஒருத்தி.

பருணிதன்: குணங்கள் பரிணமித்த பக்குவ ஞானி. புன்னகை, கடைக்கண் வீச்சு முதலியவை மங்கையர் மாட்டு ஆடவர்க்குக் கிடைக்கும் பொருள்கள். இராமன் இத்தகைய எந்தப் பொருளையும் மகளிரிடத்துப் பெற விரும்பாமல் செல்கின்றானே என்பாள், “மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன்; போகின்றதே!” என வியந்தாள். விருப்பு வெறுப்பு ஆகியவற்றையெல்லாம் இந்த இளம் வயதிலேயே வென்றுவிட்ட பக்குவ ஞானி போலும் இவன் என்பாள் “பருணிதன் கொல்!” என்று மேலும் வியந்தாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “From the women dazed with infatuation he wants nothing
  2. at all, and just goes on! Is he one
  3. who has never known what pity is? Is he some great
  4. perfected sage? No, he is a cold-blooded killer!” said one woman.

What the poem says

A woman is indignant that Irāmaṉ rides past women who would give him anything, a smile, a glance, and wants none of it. Has he never known compassion? Is he a perfected sage who has conquered all desire so young?

Then she decides: a sage would not be on his way to a wedding, so he must simply be a murderer of women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maruḷ mayaṅku maṭantaiyarmāṭṭu oru
poruḷ nayantilaṉ pōkiṉṟatē? ivaṉ
karuṇai eṉpatu kaṇṭu aṟiyāṉ, perum
paruṇitaṉkol? paṭu kolaiyāṉ!' eṉṟāḷ.