கம்பராமாயணம் 1193 · பால 20.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அமிழ் இமைத்துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்கு மாபோல் - (கண்கள்) மறைதற்குக் காரணமான இரண்டு இமைகளும் அக்கண்களுக்கு அழகென்று (இறைவனால்) அமைக்கப்பட்டிருப்பது போல; உமிழ் சுடர்க் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் - (சீதைக்கு அணிசெய்யும் மகளிர்) ஒளிவீசும் ஆபரணங்கள் சீதையின் (அழகிய) வடிவத்தை மறைக்கும் என்னும் உண்மையை உணராதவர்களாய்; அமிழ்தினைச் சுவை செய்தென்ன - (இயல்பாகவே) (அத்துணைச் சுவைகளையும் பெற்றிருக்கிற) அமிழ்துக்கு, (கற்கண்டு சர்க்கரை முதலியவை கொண்டு) மேலும் சுவை கூட்டும் முயற்சியைப் போல; அழகினுக்கு அழகு செய்தார் - (இயற்கையிலேயே) பேர் அழகுவாய்ந்த (சீதையின்) உறுப்புகளுக்கு (மேலும் புதிதாக) அழகு செய்யத் தொடங்கினார்கள்; இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து - அலை ஒலிக்கும் கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்து மக்கள் (நன்மை புரிவதாக நினைத்துப் பிழைபுரியும்) அறியாமையுடையவர்கள்.
மாது, ஓ - அசைகள். நினைக்கும் நினைவு நல்லதாயினும், அதற்கு மாறான செயல் புரியத் தொடங்குதல் பேதைமை. சீதைக்கு அணிசெய்யக் கருதுதலின் மேல் வைத்து அப்பண்பினை விளக்கியவாறு. பிறமகளிர் அணி தரித்து அழகு செய்வர். சீதை அணி பறித்து அழகு செய்வாள் என (கம்ப. 6991) அவள் அழகின் பெருமை அறிவித்தவாறு. “அணிகலம் அணிவோர் அணியிலோரே.... இவள்போல் உறுப்பே அணிகலமாக உடையோர்” (பெருங். 4:17). ஏழைமை, அறியாமை குறித்து நின்றது. “செய்யாக் கோலமொடு வந்தீர்” (சிலப். 11) எனக் கண்ணகியின் அணியா அழகு புகழப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Just as the pair of eyelids that cover the eyes are fashioned as the eyes' adornment,
- not realising that the blazing jewels would hide the lady's form,
- they adorned beauty itself, as if adding flavour to nectar:
- this world ringed by the roaring, wave-tossed sea is full of foolishness!
What the poem says
Cītai's maids begin to dress her for the wedding. The poet gently mocks them: their dazzling jewels can only hide her beauty, as the eyelids, though counted an ornament of the eye, actually cover it. Decorating her is like trying to sweeten nectar.
He ends with a general comment on human folly, people meaning well but doing the opposite. Other women wear jewels to become beautiful, while Cītai's beauty would only grow by taking them off. The verses that follow describe her ornaments from head to foot.