கம்பராமாயணம் 1204 · பால 20.14

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பை அரவு அல்குலாள் தன் பஞ்சின்றிப் பழுத்த பாதம் - பாம்பின் படம் அனைய அல்குலையுடைய சீதையினது, செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்படாமலேயே (சிவப்பு முற்றிய) திருவடிகள்; ஐய ஆம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய - (மலர்களிலேயே மிக) மென்மையதாகிய அனிச்சமலரினும் மிகவும் மென்மையான; செய்ய பூங் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு பலபட நுவல்வது - செந்தாமரை மலர் போன்றுள்ள அந்த மெல்லிய பாதங்களில் நிலைத்திருக்கத் (தோழியர்) சேர்த்திய அச்சிலம்பென்னும் காலணிகள், பலமுறை (இடைவிடாது) ஒலிப்பது; சால நொய்யவே நொய்ய என்றோ? - (பிராட்டியின் திருவடிகள்) மிகவும் மெல்லியன! ஓ மிகவும் மெல்லியன (அறிந்து செயல்படுங்கள்) என்று அறிவிப்பது தானோ?

அம்ம - வியப்பிடைச்சொல். தற்குறிப்பேற்றவணி. சிலம்பின் ஒலிக்குப் புதுப்பொருள் கற்பித்தவாறு. மெல்லிய அனிச்ச மலரினும் மெல்லியன மகளிர் பாதம் என்பதனை, “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” (திருக். 1120) எனும் திருக்குறளும் கூறும். பொருளின் மென்மை புரியாமல், அன்பு காரணமாகப் பெருஞ்சுமை யேற்றித் துன்பம் விளைத்து விடாதீர்கள் என்று கூறுவதாகச் சிலம்புகள் ஒலித்தமைக்கு அழகிய காரணம் கற்பித்தார். “மோப்பக் குழையும் அனிச்சம்” (திருக். 90) எனுமிடத்தே, அனிච்சத்தின் மென்மை குறித்திருப்பதையுணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Softer by far than the delicate aṉiccam flower are
  2. the feet of the girl whose hips are like a dancing cobra's hood, red without any lac;
  3. the anklets they fastened to stay on those red lotus-flowers, when they ring out again and again,
  4. are they saying, “So soft, oh, so soft”? Ah!

What the poem says

The maids clasp anklets on Cītai's feet, which are red without any dye and softer than the aṉiccam, the most delicate of flowers in Tamil poetry, which wilts if merely sniffed.

The poet imagines a reason for the anklets' constant chiming: they are warning everyone, “These feet are very, very soft!”, so that no one burdens them carelessly. This is the figure of fanciful causation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aiya ām aṉiccam pōtiṉ atikamum noyya, āṭal
pai aravu alkulāḷtaṉ pañcu iṉṟip paḻutta pātam,
ceyya pūṅ kamalam maṉṉac cērttiya cilampu, cāla
noyyavē noyya eṉṟō palapaṭa nuvalvatu? ammā!