கம்பராமாயணம் 1240 · பால 21.7

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீழ்மலயக் குன்றில் குலமா முழையில் குடிவாழ் தென்றல் புலியே! - விரும்பப்படும் தென்பொதிகை மலையில் உள்ள சிறந்த பெரிய குகைகளைக் குடியிருப்பாகக் கொண்ட தென்றல் எனும்புலியே; மன்றல் குளிர் வாசம் - நறுமணத்திற்கும் குளிர்ச்சிக்கும் இடமான நீ; வயங்கு அனல் வாய் - நெருப்புக்கக்கும் வாயினைக்கொண்டு; மின்தொத்து நிலாநகை - ஒளியுடைய நிலாக்கற்றைகளைப் பற்களாக்கி; இரை தேடுதியோ? - (என்போன்று பிரிந்து வாடும் பெண்டிரின்) உயிரை இரையாகத் தேடிப் புறப்பட்டு விட்டாயோ?

பிரிந்தார்க்குத் துயர்தந்து விழுங்குமாதலின், தென்றலும் புலியாயிற்று; அதன் குளிர்மணம் அனலாக ஆயிற்று. நிலாக்கற்றை பற்களாயிற்று. அதன் மெது நடை பாய்ச்சலாயிற்று; அதன் உலாவல் இரைதேடுதல் ஆயிற்று. மணக்கும்போது, குளிர்ச்சியும் நறுமணமும் உடைய உன் வாய், பிரிந்திருக்கும் இப்போது, “வயங்கு அனல் வாய்” ஆயிற்றே என்று இரங்குகின்றாள். மன்றல் - மணம். மெல்லிய தென்றலை, கவி, தன் சொல் ஆற்றலால் வலிய புலியாக்கிக் காட்டும் திறம் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With fragrance and coolness, and a mouth that shines with fire,
  2. with moonlight for the gleaming clusters of your teeth, you who dwell
  3. in the great noble caves of the beloved Malaya mountain,
  4. O tiger of the southern breeze! Are you out looking for prey?'

What the poem says

Cītai now speaks to the southern breeze, which in Tamil poetry blows from the Potiyil (Malaya) mountains, cool and sweet with sandalwood. To her it has become a tiger that has left its mountain cave to hunt.

Every gentle quality of the breeze turns savage: its coolness and scent become a mouth breathing fire, the moonbeams it travels with become its shining teeth, its soft movement becomes a pounce. The prey it is looking for is the life of a woman parted from her love. The commentary admires how the poet turns the softest of things into the fiercest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṉṟal kuḷir vācam vayaṅku aṉal vāy,
miṉ tottu nilā nakai, vīḻ malayak
kuṉṟil kula mā muḻaiyil kuṭivāḻ,
teṉṟaṟ puliyē! irai tēṭutiyō?'