கம்பராமாயணம் 1285 · பால 21.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை - மங்கலப் பொருள்களுள் ஒன்றான முழுக் கலைகளும் நிறைந்த முழு நிலாவை; பொங்கு இருங் கருங்கடல் பூத்தது ஆம் என - அலைகள் பொங்கும் பெரிய கரிய கடல் தன்னிடத்தே பூக்கப் பெற்றது போலும் என்று உவமை கூறுமாறு; செங்கிடை சிகழிகை - செந்நெட்டி மாலையும்; செம்பொன் மாலையும் - செம்பொன்னாலான மாலையும்; தொங்கலும் துயல் வர - பூமாலையும் அசையா நிற்க; சுழியம் சூடியே - சுழியம் என்னும் அணியை முடியில் (இராமன் அணிந்தான்.)
“பொங்கு இருங் கருங்கடல்” - அலைபோல் நெளியும் குழல் தொகுதிக்கும், “முழுநிலாத் திங்கள்” அம்முடியில் அணியப் பெற்ற, வயிர மணிகளாலான சுழியம் என்னும் அணிக்கும் உவமைகள் ஆயின. பெருமானின் திருமுடி அலங்காரமே மணம் நிகழும் பங்குனி யுத்தர நாளின் தோற்றத்தையுணர்த்தியது என்பார், “மங்கல முழுநிலா மலர்ந்த திங்களை” என்றார். பங்குனி உத்தர நாள் முழு நிலவன்றே வரும் ஆதலான். சிகழிகை - நெற்றியில் வட்டமாகக் குஞ்சங்களுடன் சூடும் மாலை. சுழியம் - கொண்டையில் அதனைக் கட்டும் வட்டவடிவமான அணிவகை. “துளவியல் தும்பையஞ் சுழியம் சூடினான்” (கம்ப.) எனவும், “செங்கையினில் பொற் செண்டும் திருமுடியில் சுழியமுடன்” (பெரிய புரா. கழறிற். 112) எனவும் வருதல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if the great dark surging sea had blossomed
- with the moon in the full bloom of auspicious full moonlight,
- he put on the cuḻiyam ornament, with the red pith wreath for the forehead, the chain of red gold
- and the flower garland swaying.
What the poem says
Irāmaṉ dresses his hair. Round his forehead he binds a circlet of red pith with tassels, a chain of red gold and a hanging flower garland, and on his topknot he fixes the cuḻiyam, a round diamond ornament.
His dark, wavy hair is like the great black heaving sea, and the bright round jewel on it is the full moon rising out of that sea. The commentary notes that the wedding falls on the full moon of Paṅkuṉi, so the adornment of his head itself mirrors the auspicious day.