கம்பராமாயணம் 1314 · பால 21.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நன்றி வானவர் எலாம் - நன்றியுணர்வுடைய தேவர் எல்லோரும்; இருந்த நம்பியை - அங்கு வீற்றிருந்த இராமபிரானை (நோக்கி); துன்று இருங் கடல் துவைப்பத் தோன்றிய - (அலை) செறிந்த பெருங்கடலாகிய பாற்கடலைக் கடைந்த காலத்துத் தோன்றிய; மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய அன்றினும் - மணம்மிக்க அழகிய கூந்தலையுடைய திருமகள் (திருமாலுக்கு) மாலை சூட்டிய அந்தத் திருநாளைக் காட்டிலும்; இன்று அழகு உடைத்து என்றார் - இவளுக்கு நீ மாலை சூட்டும் இந்நாள் (மிக) அழகியது என்று கூறி மகிழ்ந்தார்கள்.
இன்று நிகழும் திருமணம் “தீயோர் இறந்து உக நூறித் தக்கோர் இடர் துடைத்தற்கு” (கம்ப. 5685) ஆதலின், “அன்றினும் இன்று அழகுடைத்து” என்றனர் தேவர் என்க. தம் பொருட்டுப் பெருமான் அவதரித்துள்ளான் ஆதலால் அந்நன்றியுணர்வோடு தேவர்கள் நிறைந்திருந்தனர் என்பார் “நன்றி வானவர்” என்றார். பாற்கடல் கடைந்த அன்று நஞ்சு எழுந்தது; அமுதத்தை அசுரர்க்குத் தராமல் ஏய்த்த கசப்பு, தேவாசுரப் போர் முதலிய இடையீடுகள் பின் நிகழ்ந்தன. அத்தகைய ஊறுகள் எதுவுமின்றி இத்திருமணம் இனிதே நிகழ்வதால் இரண்டையும் கண்ணுற்ற தேவர்கள் “அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்” எனினுமாம். தேவ வடிவினர் திருமணத்தினும் மானுடம் புக்க இவ்விருவர் திருமணம் அழகிற்று என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the grateful gods, looking at the noble one seated there,
- said: 'More than on that day when she of the fragrant tresses,
- who rose as the dense, dark, mighty sea was churned,
- put the garland on you, today has beauty.'
What the poem says
The gods watching from the sky speak to Irāmaṉ. When the ocean of milk was churned, Lakṣmī rose from it and garlanded Viṣṇu as her husband. Today, they say, is lovelier than that day.
They are grateful because he has been born on earth for their sake, and this marriage will lead to the destruction of the wicked. The commentary adds that the first wedding was marred by the poison that rose from the ocean and by the quarrel with the demons over the nectar, while this one goes forward without any such trouble.