கம்பராமாயணம் 1327 · பால 21.94

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்,
ஆர்த்தன நால் மறை, ஆர்த்தனர் வானோர்,
ஆர்த்தன பல் கலை, ஆர்த்தன பல்லாண்டு,
ஆர்த்தன வண்டு இனம், ஆர்த்தன அண்டம்.

பொருள் · Meaning in Tamil

ஆர்த்தன பேரிகள் - அப்பொழுது மங்கல பேரிகைகள் முழங்கின; ஆர்த்தன சங்கம் - சங்க வாத்தியங்கள் முழங்கின; ஆர்த்தன நான்மறை - நான்கு வேதங்களும் முழங்கின; ஆர்த்தனர் வானோர் - தேவர்கள் (ஆனந்தத்தால்) முழங்கினர்; ஆர்த்தன பல்கலை - பல் வகைக்கலைகளும் ஆர்ப்பரித்தன; ஆர்த்தன பல்லாண்டு - பல்லாண்டு இசைகள் (எங்கும்) ஒலித்தன; ஆர்த்தன வண்டு இனம் - (மலர் மாலைகளில் மொய்த்த) வண்டினங்களும் (இம்மகிழ்ச்சி வெள்ளத்தில் பங்கு கொள்பவைபோல்) ஆரவாரித்தன; ஆர்த்தன வேலை - கடல்களும் (மகிழ்ச்சியில் பங்குபெற்று) ஆர்ப்பரித்தன!

உலகுக்கு நலம் விளைக்கும் பெருநிகழ்வுகள் நிகழுங்காலத்தே, இயற்கைக் கூறுகளும் பங்குபெறும் எனக்குறிக்கும் இலக்கிய மரபு பற்றி, அறந்தலை நிறுத்த வந்த மணம் இதுவாதலின், “ஆர்த்தன வண்டினம்; ஆர்த்தன வேலை” என்றார். சொற்பொருட் பின்வருநிலையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great drums roared, the conches roared,
  2. the four Vedas roared, the gods roared,
  3. the many arts roared, the songs of 'Many Years' roared,
  4. the swarms of bees roared, the oceans roared.

What the poem says

A burst of celebration, built on one verb repeated eight times: drums, conches, the chanting of the Vedas, the gods, the performers of every art and the songs of blessing all resound.

Even the bees in the garlands and the oceans join in. Poetic convention holds that nature itself takes part when an event of great good for the world takes place, and this marriage has come to establish dharma. Repeating the same word with the same meaning is a recognised figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttaṉa pērikaḷ, ārttaṉa caṅkam,
ārttaṉa nāṉmaṟai, ārttaṉar vāṉōr,
ārttaṉa pal kalai, ārttaṉa pallāṇṭu,
ārttaṉa vaṇṭu iṉam, ārttaṉa vēlai.