கம்பராமாயணம் 1329 · பால 21.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னமும் அன்னவர் அம்பொன் மலர்த்தாள் சென்னி புனைந்தாள் - அன்னப்பெடை போன்ற சீதையும், அத்தேவிமார் மூவரின் அழகிய பொன்போல் அருமையான திருவடித்தாமரை மலர்களைத் தன் தலைக்கு அணியாகக்கொண்டு வணங்கினாள்; சிந்தை உவந்தார் - (அப்போது அவர்கள் மூவரும்) சிந்தை மகிழ்ந்தவர்களாகி; கன்னி அருந்ததி காரிகை காணா - கற்பழிவில்லாத அருந்ததி போன்ற அழகிய மங்கையாகிய சானகியைப் பார்த்து; நல்மகனுக்கு இவள் நல் அணி என்றார் - “நம் சிறப்பிற்குரிய (செல்வ) மகனுக்கு, இச்சீதை சிறப்பிற்குரிய அணிகலம் ஆவாள்” என்றனர்.
மாமியர் மூவரும், மணமக்கள் பொருத்தம் தோன்ற, “நல் மகனுக்கு இவள் நல் அணி” என்றார். நம் நல் மகனுக்கு இவள் நல்ல அணிகலமாகி அழகு கூட்டுவாள் எனப் பிராட்டியின் ஏற்றம் கூறியவாறுமாம். சீதை, இராமன் வாழ்வுக்கு அழகூட்டுவாள் என்பதாம். காணா - கண்டு. செய்யா என்னும் வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The swan too set their lovely golden flower-like feet
- upon her head; their hearts rejoiced;
- looking at the lovely girl, like the virgin Aruntati,
- they said: 'For our good son she is a fine ornament.'
What the poem says
Cītai, graceful as a swan, follows Irāmaṉ in bowing to the three queens, touching her head to their feet.
Her new mothers-in-law are delighted. Looking at the girl, who is as chaste as Aruntati, they agree that she is a fine jewel for their fine son. The phrase also suggests that she will be the ornament that makes his whole life beautiful.