கம்பராமாயணம் 1348 · பால 22.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாழிப் புயம் - வலிமைவாய்ந்த தோள்கள்; உயர்திக்கிடை அடையப்புடை படர - உயர்ந்த திக்குகளின் எல்லையிடையே சென்றடையுமாறு பக்கங்கள் விரியவும்; சடைமுடிச் சூழி விண்முடி தொட - சடையை முடித்துக் கட்டிய தன் உச்சி விண்ணின் முகட்டைத் தொடவும்; வெண்மதி அயல் தோன்ற - வெண்ணிறமுள்ள நிலா முடியின் அருகிலே தோன்றவும்; ஆழிப்புனல், எரி, கால், நிலம், ஆகாயமும் அழியும் ஊழிக் கடை முடிவில் - கடல் வடிவான நீரும், நெருப்பும், காற்றும், நிலமும், வானமும் ஆகிய (பஞ்ச பூதங்களும்) அழிகின்ற ஊழியாகிய யுகமுடிவுக் காலத்தில்; திரி உமை கேள்வனை ஒப்பான் - நடம்புரிகின்ற உமையம்மையின் மணாளனாகிய சிவபெருமானை ஒப்பான் ஆகவும் -
“சடை முடிச்சூழி விண்முடி தொட” எனப் பொருள் இயைபுக்கேற்ப மாற்றிக் கூட்டுக. “ஊழிக்கடை முடிவில் தனி உமை கேள்வன்” என்பதிலும், “திரி உமை கேள்வன்” என்பதே பொருள் சிறப்பதால், அப்பாடமே கொள்ளப்பட்டது. தோன்றிய முறைக்கேற்ப, ஆகாயம், கால், அனல், புனல், நிலம் எனக் கூறலே முறையாயினும் செய்யுளாதலின் பிறழக் கூறப் பெற்றது. ஊழி முடிவில், சிவபெருமான் சர்வ சங்காரனாய், ஊழிக் கூத்தாடுகையில் ஐம் பூதங்களும் அழியும்; அப்போது அம்மைகாண நடமாடுவான் என்பது பற்றி, “ஆழிப்புனல், எரி, கால், நிலம், ஆகாயமும் அழியும் ஊழிக் கடை முடிவில் திரி உமைகேள்வனை ஒப்ப” என்றார். புயம் திக்கடைய விரியலும், சடைவிண் தொடுதலும், அயலே வெண்மதி தோன்றலும் சிவபிரானுக்கும் பரசுராமனுக்கும் சிலேடையாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His mighty arms spreading out on either side to reach the high quarters,
- his coiled crown of matted hair touching the sky, the white moon showing beside it,
- he was, at the final end of the age when the sea's water, fire, wind, earth and sky
- are all destroyed, like the husband of Umā as he roams in his dance;
What the poem says
Paracurāmaṉ now looks as vast as Civaṉ at the dissolution of the world. His arms stretch to the ends of the directions, his matted hair brushes the vault of heaven, and the moon hangs beside it, as the crescent sits in Civaṉ's hair.
At the end of an age, when the five elements perish, Civaṉ dances the dance of destruction while Umā watches. Every detail fits both figures at once. The usual order of the elements is sky, wind, fire, water, earth; the poet varies it for the verse.