கம்பராமாயணம் 1534 · அயோத்தியா 2.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அஃது மாற்றம் உரை செய - அந்த வார்த்தையை மந்தரை சொல்ல; மங்கை உள்ளமும் - (அதுகேட்ட) கைகேயியின் மனமும்; ஆற்றல் சால் - பெருமை அமைந்த; கோசலை அறிவும் - கோசலையின் புத்தியும்; ஒத்த - ஒத்திருந்தன; வேற்றுமை உற்றிலள் - (கூனி கருதியது போல) வேறுபாடு கருதினாளில்லை; (ஏனெனில்) வீரன் தாதை - இராமன் தந்தையாகிய தயரதன்; அவள் இருதயத்து - அந்தக் கைகேயியின் இதயத்தில்; புக்கு ஏற்று - புகுந்து இணங்கி; இருக்கவே கொல் - இருந்ததனாற் போலும்.
கோசலை எவ்வாறு அறிந்தாளோ அவ்வாறே கைகேயி நினைத்தாள் என்பதாகும். காரணம் இருவர்க்கும் நாயகன் தயரதன் என்பதனால் ‘எப்பொழுதும் கைகேயியின் மனத்தில் தயரதன் இணங்கி வீற்றிருத்தலின் தயரதன் மனமே கைகேயி மனமாயினது அன்றி வேறில்லை யாதலின்’ எனக் கூறினும் பொருந்தும். ஆற்றல் என்பது பெருமை; மூவகையாற்றல்களுள் பெருமையும் ஒன்று. மூவகை த்து - அறிவு, ஆண்மை, பெருமை என்பன. ஆல், ஆம் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When she spoke those words, the lady's heart
- and the mind of Kōcalai, rich in worth, were one and the same;
- she felt no difference at all: was it because the hero's father had entered
- her heart and dwelt there, welcomed?
What the poem says
Hearing that Irāmaṉ is to be crowned, Kaikēyi reacts exactly as Kōcalai did: with pure joy, and none of the jealousy Mantarai hoped to stir.
The poet suggests why. Tacarataṉ lives so fully in Kaikēyi's heart that her mind is simply his mind, and what pleases him pleases her.