கம்பராமாயணம் 199 · பால 5.31

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்ன மா முனிவன் கூற, எழுந்து, பேர் உவகை பொங்க,
மன்னவர் மன்னன், அந்த மா முனி சரணம் சூடி,
'உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டு ஓ?
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி' என்றான்.

பொருள் · Meaning in Tamil

என்ன மாமுனிவன் கூற - என்று, மாமுனிவனாகிய வசிட்டன் கூற; மன்னர் மன்னன் எழுந்து பேருவகை பொங்க - (அது கேட்ட) மன்னர் மன்னனாகிய தயரதன் மிகுந்த மகிழ்ச்சி பொங்க (எழுந்து); மாமுனி சரணம் சூடி - மாபெரும் முனிவனாகிய வசிட்டனது பாதங்களை வணங்கி (தலைக்கு அணியாக அணிந்து), உன்னையே புகல்புக்கேனுக்கு - தங்களையே அடைக்கலம் அடைந்திருக்கும் அடியவனாகிய எனக்கு, உறுகண் வந்து அடைவது உண்டோ - துன்பம் வந்து சேர்தல் உண்டோ? (இல்லை என்றபடி); அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் - அந்த வேள்வியைச் செய்வதற்கு அடியவனாகிய நான் செய்ய உரிய பணிவிடையை இனிதே எனக்குத் தருக என்று கூறினான்.

முனிவன்: உலகப் பற்றற்றவன் (உலகியலின்பங்களை வெறுத்தவன்). பொங்க, எழுந்த என்பன மகிழ்ச்சி மிகுதியைக் காட்டி நின்றன. புக்கேனுக்கு: புக்கேன் வினையாலணையும் பெயர். புக்குநின்ற நான் என்னும் பொருள்தந்து நின்றது. உறுகண்: துயரம். பணி: முதல் நிலைத் தொழிற் பெயர். வேலை என்னும் பொருள் உடையது.

முனிவன் கூறிய மொழி கேட்ட மன்னன், ‘அந்த வேள்வியைச் செய்ய நான் செய்ய வேண்டியதைக் கட்டளை இடுங்கள்’ என்று கூறினான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the great sage said this, the king of kings rose, his great joy welling up,
  2. and placing that great sage's feet upon his head, said:
  3. 'Can any sorrow come to one who has taken refuge in you alone?
  4. Graciously give me, your servant, the task I must do for it.'

What the poem says

Overjoyed, Tacarataṉ rises and bows his head to Vaciṭṭaṉ's feet.

He has taken refuge in the sage, he says, so no sorrow can touch him. He asks to be told exactly what he must do to carry out the sacrifice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉamā muṉivaṉ kūṟa, eḻuntu, pēr uvakai poṅka,
maṉṉar maṉṉaṉ, anta mā muṉi caraṇam cūṭi,
'uṉṉaiyē pukal pukkēṉukku uṟukaṇ vantu aṭaivatu uṇṭō?
aṉṉataṟku aṭiyēṉ ceyyum paṇi iṉitu aḷitti' eṉṟāṉ.