கம்பராமாயணம் 217 · பால 5.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று குவவுத் தோளினான் - என்று நினைத்த, திரண்ட தோள்களை உடைய அந்த மன்னன் (உரோமபதன்); சேனை சூழ்தர எழுந்து - நாற்பெரும் படையும் தன்னைச் சூழ்ந்து வர எழுந்து (புறப்பட்டு); அருமறை முனிவர் யாரொடும் - அரிய வேதங்களைக் கற்ற முனிவருடன்; இரண்டு யோசனை சென்று - இரண்டு யோசனை தூரம் எதிர் சென்று; மன்றல் அம் குழலியர் நடுவண் - மணமும் அழகும் உடைய கூந்தலை உடையவர்களான பெண்களின் நடுவே; மாதவக் குன்றினை எதிர்ந்தனன் - சிறந்த தவமலை போன்றவனாகிய கலைக் கோட்டு முனிவனைக் கண்டான்.
அருமறை: அரிய வேதம்; சூழ்தர - சுற்றிலும் வர. மாதவக் குன்று: உருவகம். நிலையில் திரியாது அடங்கியவனாதலின் ‘மலை’: ப்பு மாதவக் குன்று வர, மழை பொழிந்தது. அதனால் மனம் மகிழ்ந்த மன்னனை ‘குவவுத் தோளினான்’ என்றதன் நயம் உணரத்தக்கது. மன்றல்: மணம். குழலினர்: கூந்தலை உடையவர்கள். யாரொடும்: யாவருடனும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking this, the king with massive shoulders rose and, with all the sages versed in the hard Vedas,
- went out two leagues, his army around him,
- and there, amid the women with fragrant, lovely hair,
- he met the mountain of great penance.
What the poem says
Urōmapataṉ sets out with his army and his learned sages and goes two leagues to welcome the sage.
He finds him walking among the courtesans. The sage is called a mountain of penance because he is so steadfast and unshakeable.