கம்பராமாயணம் 233 · பால 5.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புறவு ஒன்றின் பொருட்டு ஆகத் துலைபுக்க - ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தரத்துணிந்து தராசுத்தட்டிலேறிய; பெருந்தகை தன் புகழில் பூத்த - பெருந்தகையான சிபிச் சக்கரவர்த்தியினது புகழ் பொருந்திய பெருங்குடியில் தோன்றிய; அறன் ஒன்று திருமனத்தான் - அறப்பண்பு பொருந்திய நல்ல மனத்தினனும்; அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் திறல் உண்ட வடிவேலான் - தேவர்களுக்குத் துன்பம் தந்த அசுரரின் வலிமையை அழித்த வேலை உடையவனும்; தயரதன் என்று உயர்கீர்த்தி செங்கோல் வேந்தன் - தயரதன் என்னும் பெயர்கொண்ட புகழ்மிக்க செங்கோலுடையவனுமான வேந்தனது; விறல் கொண்ட மணிமாட அயோத்தி நகர் அடைந்து - வலிமையை அணியாகக் கொண்ட மணிகளால் இழைத்த மாளிகைகளையுடைய அயோத்தி நகரத்தை அடைந்து; இவண் மீள்தல் என்றான் - பின் இங்கு மீண்டு திரும்புதலே (நான் வேண்டும் வரமாகும்) என்று உரோமபதன் சொன்னான்.
புறவு: புறா. புறாவுக்காகத் தராசில் ஏறிய சிபி மன்னன் வரலாறு பிரசித்தம். துலை: துலாக்கோல் (தராசு). புக்க: புகுந்த. புகு என்ற பகுதி இரட்டித்து; காலம் காட்டியது (பெயரெச்சம்). பெருந்தகை: பண்புத்தொகை; புகழ் இல்: இல் குடி அல்லது குலம். பூத்தல்: உண்டாதல் அல்லது பரந்திருத்தல் என்றும் கூறலாம். இழைத்தல்: அடிக்கடி செய்தல்; உண்ட: அழித்த. இதில் அழிக்கும் தொழில் வேலின் மேலேற்றப்பட்டது. செங்கோல்: செம் கோல்: நாட்டை நன்னெறி நிற்கச் செய்வது. விறல்: வலிமை. மீள்தல்: தொழிற்பெயர்
துலைபுக்க - பெருந்தகையின் புகழில் பூத்த - மனத்தன் வடிவேலான் - வேந்தன் - நகர் அடைந்து மீள்தல் என்று பொருள் முடிவு காண்க.
முந்திய பாடலில் வரும் அருளும் என்று கேட்ட மன்னனை நோக்கி வரம் யாது என வினவிய முனிவனுக்கு அயோத்தி அடைந்து மீள்தலே அவ்வரம் என்றான் உரோமபதன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He whose sacred heart is one with dharma, born into the fame of that noble one who mounted the scales for a single dove;
- he of the sharp spear that consumed the strength of the asuras who wrought harm on the immortals;
- Tacarataṉ, the king of the just sceptre and lofty fame: that you go to his
- Ayōtti, the city of mighty jewelled mansions, and come back here,' he said.
What the poem says
Urōmapataṉ names his boon: that the sage go to Tacarataṉ's city and then return. He praises Tacarataṉ as a descendant of Cipi, the legendary king who put himself on the scales to ransom a dove from a hawk, and as the slayer of asuras who troubled the gods.
The 'just sceptre' (cheṅkōl) is the classic Tamil emblem of righteous rule.