கம்பராமாயணம் 2403 · அயோத்தியா 11.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“மல் காணும் திரு நெடுந்தோள் - மற்போரில் எல்லை கண்ட அழகிய நெடிய தோளை உடைய; மழை காணும் மணி நிறத்தாய் - கார்மழையைக் கண்டால் போன்ற நீலமணி போலும் நிறம் வாய்ந்த திருமேனி அழகனே!; கல்காணும் திண்மையான் - மலையைக் கண்டாற் போன்ற வலிமை உடையவன்; கரை காணாக் காதலான் - (இராமன் பால்) எல்லை காணமுடியாத பேரன்பை உடையவன்; காணில் - வடிவத்தைப் பார்த்தால்; அல் கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் - இருளைக் கண்டாற்போன்ற அழகு பொருந்திய உடம்பை உடையவன் (ஆகிய இத்தகைய குகன்; நெறி எதிர் - நீ செல்கின்ற வழியின் எதிரில்; நின்காணும் உள்ளத்தான் - உன்னைப் பார்க்கும் மனம் உடையவனாய், நின்றனன்” என்றான் - நின்று கொண்டுள்ளான்' என்று சொன்னான் சுமந்திரன்.
குகன் பரதனை எதிர்க்க நின்றவனே ஆயினும் இராமன்பால் பேரன்புடையவனாக அச்சுமந்திரனால் அறியப்பட்டவன் ஆதலால் இராமனை வரவேற்கச் செல்லும் பரதனை எதிர்பார்த்துக் கண்டு மகிழவே நின்றதாகச் சுமந்திரன் தன் போக்கில் கருதினான் என்க. பரதன் கங்கையின் வடகரைப்பகுதியில் கங்கைக் கரையோரமாக நில்லாமல் உள்ளே தள்ளி நிலப்பகுதியில் சிறிது தொலைவில் நிற்றலின் காண்பார்க்குக் குகனது சீற்றத் தோற்றம் புலனாகாமையும் பொதுத்தோற்றமே அறியப்படுதலும் உண்டாயிற்று. மேனி அழகாலும், நிறத்தாலும் இராமன், குகன், பரதன் மூவரும் ஓர் அணியாதல் பெறப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'firm as a rock, with a love that knows no shore,
- his body as beautiful as if one saw the night itself;
- O you with long, fair shoulders proven in wrestling, coloured like a gem seen in the rain cloud,
- he stands across your path, his heart set on seeing you,' he said.
What the poem says
Cumantiraṉ completes the introduction. Kukaṉ is as solid as a rock, his love for Irāmaṉ has no limit, and his body is dark and handsome like the night.
Cumantiraṉ assumes Kukaṉ is standing across their path because he is eager to meet Paratan. He cannot see Kukaṉ's anger from this distance, and he takes for granted that Irāmaṉ's friend will welcome a brother come to bring Irāmaṉ home. All three, Irāmaṉ, Kukaṉ and Paratan, share the same dark beauty.