கம்பராமாயணம் 2744 · ஆரணிய 3.37

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அவ்வகத்தியர்) வானோர் பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என - தேவர்கள் முன்னொரு காலத்தில் 'அசுரர்கள் கடலில் மூழ்கி ஒளிந்து கொண்டனர். ஆதலால் அவர்கள் இனி அழியமாட்டார்கள் எனக் கருதி; எண்தவ எமக்கு அருள்க எனக் குறையிரப்ப - மதிக்கத் தக்க தவம் செய்த முனிவனே! எங்களுக்கு அருள்புரிவீராக' எனத் தம் குறையைச் சொல்லிக் கெஞ்சிக் கேட்க; கண்டு கடலெல்லாம் ஒரு கைவாரினன் முகந்து உண்டு - அவர்கள் படும் துன்பத்தை அறிந்து ஏழுகடல்களிலுள்ள நீரை எல்லாம் ஒரு கையால் அள்ளி எடுத்துப் பருகி; பின் அவர்கள் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - பிறகு அவ்வானோர் 'அக் கடல் நீரை உமிழ்ந்தருள்க' என்று வேண்டியதும் மீண்டும் உமிழ்ந்து அக்கடல்களை நீரால் நிரப்பினான்.

தேவர்களின் பகைவரான விருத்திராசுரன் முதலிய அரக்கர்கள் கடலில் ஒளிந்து கொள்ள இந்திரன் முதலியோர் அகத்தியரை அடைந்து தம்மைக் காக்க வேண்டினர். அவர் கடல் நீரைக் குடித்ததும் அவ்வரக்கர்கள் வெளிப்பட இந்திரன் அவர்களை அழித்தான். பின் தேவர்கள் விருப்பப்படி தாம் பருகிய நீரை உமிழ்ந்து கடல்களை மீண்டும் நிரப்பினார். முன்னர் அரக்கர்களை அழிக்கத் தம் செயலால் உதவிய அகத்தியர் இப்போது இராமனுக்குப் படைக்கல முதவி அரக்கர்களை அழிக்க உதவப் போகிறார் என்ற குறிப்புப் புலனாகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Long ago, when the gods said, 'The demons have sunk into the sea; they will not perish,'
  2. and begged him, 'Esteemed ascetic, grant us grace,'
  3. he saw their need, scooped up the whole ocean in one hand
  4. and drank it; and when they then said, 'Spit it out,' he spat it out.

What the poem says

The poet now recalls the great deeds of Akattiyaṉ. Once, when the demons who warred with the gods hid in the depths of the ocean, the gods begged the sage for help. He scooped up all the seas in one palm and drank them, exposing the demons so that Intiraṉ could destroy them; afterwards, at the gods' request, he spat the water back to refill the seas.

The commentary notes the hint: as he once helped destroy demons, Akattiyaṉ will now help Irāmaṉ do the same by giving him weapons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇṭu,'avuṇar mūḻkiṉar; paṭārkaḷ 'eṉa vāṉōr,
'eṇ tava! emakku aruḷka 'eṉak kuṟaiyirappak
kaṇṭu, oru kai vāriṉaṉ mukantu kaṭal ellām
uṇṭu, avarkaḷ piṉ'umiḻka 'eṉṟalum umiḻntāṉ.