கம்பராமாயணம் 2746 · ஆரணிய 3.39

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'யோகம் உறு பேர் உயிர்கள் தாம் , உலைவு உறாமல்
ஏகும் நெறி யாது ? 'என , மிதித்து அடியின் ஏறி ,
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்
நாகமது நாகம் உற , நாகம் என நின்றான் .

பொருள் · Meaning in Tamil

யோகமுறு பேர்உயிர்கள் தாம் - யோக மார்க்கத்தில் நிலை நிற்கும் பெரும் முனிவர்கள் தாம்; உலைவுறாமல் ஏகு நெறியாது என - துன்பம் அடையாமல் (இவ்விந்த மலையைக்) கடந்து போகும் வழி எது என்று (தேவர்கள் அந்த அகத்தியரைக் கேட்க; அடியின் மிதித்து ஏறி - தம் காலடியால் மிதித்து அம்மலை மேல் ஏறி; மேகநெடுமாலை தவழ் விந்தம் எனும் - பெரிய மேகங்கள் நீண்ட வரிசையில் படிந்துள்ள விந்தியமலை எனப்படும்; விண் தோய் நாகம் அது - வானம் அளாவி உயர்ந்த மலையானது; நாகம் உற - பாதாள உலகைச் சென்றடையும்படி ஆழ்ந்து போக; நாகம் என நின்றான் - ஒரு யானை போலப் பெருமிதத்துடன் நின்றான்.

யோகமுறு பேர் உயிர் என்பதற்கு முயற்சியை மேற்கொண்டு வாழும் பெரும் கணக்கில் உள்ள உயிர்கள் என்பர். நாகம் - பல பொருள் குறித்த ஒரு சொல். விசுவாமித்திரர் விருப்பப்படி இராமன் சீதையை மணக்க வேண்டி வில்லை ஒடிக்க எழுந்து சென்ற போது 'நாகமும் நாகமும் நாண நடந்தான்' (697) என்ற அடியையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இது சொல் பின் வருநிலை அணி.

அகத்தியர் விந்தம் அடக்கிய வரலாறு:

விந்திய மலை மற்றெல்லா மலைகளிலும் தான் உயரக் கருதி வானளாவி உயர்ந்தது. அதனால் கதிரவன், மதி, விண்மீன்கள் ஆகியவை வானில் செல்லும் வழி தடுக்கப் பெற்றது. அது கண்டு தேவரும் முனிவரும் அகத்தியரை விந்தியமலையை அடக்குமாறு வேண்டினர். அவர் அம் மலையிடம் தான் வடக்கேயிருந்து தென் திசைக்குச் சென்று மீளும் அளவு அவ்வாறே குறுகிக் கடக்கக் கூறிச் சென்றார். அதுமுதல் அதன் வளர்ச்சி குன்றியது என்பது புராண வரலாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When asked, 'What path can the great souls bent on yoga
  2. take to pass without distress?', he climbed it, treading it underfoot,
  3. so that the sky-touching mountain called Vintam, where long garlands of cloud creep,
  4. sank to the underworld; and he stood there like an elephant.

What the poem says

Another of Akattiyaṉ's feats: the Vindhya mountain, Vintam in Tamil, once grew so high in rivalry with other peaks that it blocked the paths of the sun, moon and stars. When the gods and sages asked him for a way across, Akattiyaṉ climbed it and pressed it down with his feet until it sank toward the underworld, and he stood upon it as proud as an elephant.

The poet plays on the word nākam, which means mountain, the underworld and elephant in the same line. The legend says the mountain was told to stay low until the sage returned from the south, and so it has never grown again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yōkamuṟu pēr uyirkaḷtām, ulaivuṟāmal
ēku neṟi yātu? 'eṉa, mitittu aṭiyiṉ ēṟi,
mēka neṭu mālai tavaḻ vintam eṉum viṇ tōy
nākam atu nākam uṟa, nākam eṉa niṉṟāṉ.