கம்பராமாயணம் 2801 · ஆரணிய 4.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெறி நீங்கலாய் - அறநெறியிலிருந்து நீங்காதவரே!; நீங்க அரும் தாயின் தந்தையின் - ஒரு போதும் நீங்காத தாயை விட்டும் தந்தையை விட்டும்; தண்நகர் வாயின் நீங்க - குளிர்ந்த நீர் வளம் கொண்ட அயோத்தி நகரின் கோட்டை வாயிலை விட்டும் நீங்கி, வனம் புகுந்து எய்திய நோயின் நுன்னின் நீங்கினெம் - காட்டிற்கு வந்தடைந்த துன்பத்திலிருந்து உங்களை அடைந்ததால் நீங்கினோம், என் எங்களை நீயும் நீங்குதியோ - இந்நிலையில் எங்களை விட்டு நீங்களும் இறந்து போவீர்களா? (இறத்தல் கூடாது என்றபடி).
தாயையும் தந்தையையும் விட்டுப் பிரிந்தும் அயோத்தி நகரை விட்டு நீங்கியும் காட்டை அடைந்து இராமலக்குவர் துன்பம் எய்தினர். அத்துன்பம் சடாயுவைக் கண்டு நீங்கிய நிலையில் என்ன செய்ய இயலும் எனக் கேட்டு அவர்கள் சடாயுவைத் தீப் புகுவதிலிருந்து தடுத்தனர். நீங்க அரும் என்பதைத் தாய், தந்தை ஆகிய இரு சொற்களின் முன்னரும் கூட்டுவதால் மத்திம தீபம்.
நுன் - உன் கன்னட நாட்டுத் திசைச்சொல் என்பார் நச்சினார்க்கினியர் (சீவக. 324). நீயும் - உயர்வுச் சிறப்பும்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை எனவும் கொள்வர். தாயின் தந்தையின், வாயின், நுன்னின் - இவற்றில் உள்ள இன் உருபு நீக்கப்படு பொருளாயும் எல்லைப் பொருளாயும் கொள்ளப் பெறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'From our mother and our father, whom we could never leave, from the gates
- of our cool city we parted, entered the forest, and the sorrow that came upon us
- we have shed through you; why then
- would you too leave us, you who never leave the path of right?'
What the poem says
The brothers press their plea. They left behind the mother and father they could never willingly part from, and the gates of their beloved city, and came into the forest in sorrow. Finding Caṭāyu has eased that sorrow. How can he, who never strays from what is right, now leave them as well?