கம்பராமாயணம் 2804 · ஆரணிய 4.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூ அராவு பொலங்கதிர் வேலினீர் - கூராகத் தீட்டப் பெற்றுப் பொன் ஒளி வீசும் வேல்படையைக் கொண்டவர்களே!; தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் - தேவர்களாயினும் அசுரர்களாயினும் நாகலோகத்தவராயினும் வேறு ஏவராயினும் உங்களுக்குத் துன்பம் செய்தார் என்றால்; சாவர் ஆக்கி அரசு தருவென் என்றான் - அவர்களை மாண்டவராக்கி உங்கள் அரசை மீட்டுக் கொடுப்பேன் என உறுதி கூறினார் (சடாயு.
பூ - கூர்மை. பூத்தொழில் அமையுமாறு பல சிற்பத் தொழில் பட அராவுதல் என்றும் கொள்வர். பூ அராவு வேற் புரந்தரன் (30/7) என்பார் பின்னரும், ஏவர் என்றதால் பிற மனிதர் கந்தருவர் போன்றவரைக் குறிக்கிறது.
திண்திறல் - ஒருபொருட் பன்மொழி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Whether gods, Dānavas, the Nāgas of firm strength, or others,
- whoever they may be, if they have done you harm,
- you of the honed spears that gleam with golden light,
- I will make them dead men and give you back your kingdom,' he said.
What the poem says
Caṭāyu assumes that some enemy has driven them out and vows to set things right. Whoever has wronged them, gods, demons, serpent beings or anyone else, he will kill them and restore the kingdom to the brothers.