கம்பராமாயணம் 2810 · ஆரணிய 4.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கேழ் கிளர் மௌலியான் கேட்டு உவந்தனன் - ஒளி விளங்கும் முடியுடைய சடாயு அது கேட்டு மிகவும் மகிழ்ந்தவராக; தோட்டு அலங்கலினீர் - பூவிதழையுடைய மாலை அணிந்தவர்களே; வள நாட்டின் துறந்தீர் - வளப்பமுள்ள நாட்டை விட்டு நீங்கி வந்தவர்களானீர். நீவிரும் நல்நுதல் தானும் இக்காட்டில் வைகுதிர் - நீங்களும் நல்ல நெற்றியை உடைய சீதையும் இந்த வனத்தில் தங்கி வாழுங்கள்; யான் காக்குவென் என்றான் - நான் உங்களை எல்லாம் காப்பேன் எனக் கூறினார்.
சடாயு முடியுடையவர் என்பதை முன்னரே 'நீளுறு மேருவின் நெற்றி முற்றிய வாள் இரவியின் பொலி மௌலியான்தனை (2696) எனச் சுட்டுவார்: கழுகுக்குள்ள உச்சிக் கொண்டை போன்ற மயிர்த் தொகுதியை மௌலி என உரைத்தார் என்பர்.
தோடு - பூவிதழ். தந்தையாம் தயரதன் மறைந்தாலும் நாடு விட்டுக் காடு வந்தாலும் இராமன் முதலியோர்க்குத் தாம் காவலாய் இருப்பதாகக் கூறும் சடாயுவின் கூற்றில் தந்தையுளம் வெளிப்படுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He of the gleaming crest heard it and rejoiced:
- 'You who wear garlands of petals, you have given up your rich
- land; you and the lady of the fair brow, in this
- forest, stay; I will guard you,' he said.
What the poem says
Delighted by the story, Caṭāyu invites the three exiles to live in his forest, promising to protect them himself. Though their father is gone and they have left their kingdom, he will be a father to them.
The bird's 'crown' is his crest of feathers, which the poet earlier compared to the sun on Mount Mēru.