கம்பராமாயணம் 2827 · ஆரணிய 5.13

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால்
இற்றவன் , அன்றுதொட்டு இன்றுகாறும் தான்
நல் தவம் இயற்றி , அவ் அநங்கன் , நல் உருப்
பெற்றனன் ஆம் 'எனப் பெயர்த்தும் எண்ணுவாள் .

பொருள் · Meaning in Tamil

கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால் இற்றவன் - தொகுதியான அழகிய சடையை உடைய சிவனின் நெற்றிக் கண்ணால் எரித்தலால் உடல் அழியப் பெற்றவனான; அவ் அனங்கன் தான் - அந்த மன்மதனே: அன்று தொட்டு இன்று காறும் நல் தவம் இயற்றி - தன் உடல் அழிந்த அன்று முதல் இன்று வரை நல்ல தவங்களைச் செய்து; நல் உருப் பெற்றனனாம் - இந்த நல்ல வடிவைப் பெற்றனன் ஆகும்; எனப் பெயர்த்தும் எண்ணுவாள் - என்று மீண்டும் சூர்ப்பணகை நினைப்பாள்.

முன்னர் மன்மதனோ என்று ஐயுற்று அவன் வடிவம் தான் சிவன் நெற்றிக் கண்ணால் எரிந்து விட்டதே என எண்ணியவள் இந்த வடிவைப் பெறுதற்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என எண்ணுகிறாள். அனங்கன் - அங்கம் இல்லாத மன்மதன். தான் - துணிவுப் பொருளுணர்த்தும் இடைச்சொல். இது தற்குறிப்பேற்ற அணி. மன்மதன் அனங்கனான கதை: முன்னர்க் கைலாயத்தில் சனகாதி முனிவர்க்குச் சிவன் யோக நிலையை உணர்த்த யோக நிலையில் இருந்த போது தேவர்களின் ஏவலான் மன்மதன் சிவன் மீது மலர்ப்பாணங்களை எறிய அதனால் சினங் கொண்ட சிவன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He who perished when burned by the eye of the one with the lovely matted locks,
  2. from that day until this day
  3. has done good penance, and that bodiless one
  4. must have won this fine form,' she thinks again.

What the poem says

Cūrppaṇakai has another idea. Perhaps this is Kāmaṉ after all: burned to ashes by Civaṉ's third eye, he may have spent all the time since in austerities and so regained a body, this beautiful one.

The commentary retells the legend: when the gods sent Kāmaṉ to shoot his flower arrows at Civaṉ while he sat in yogic meditation, Civaṉ in anger burned him with the eye in his forehead, and Kāmaṉ became 'the bodiless one'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṟṟai am caṭaiyavaṉ kaṇṇiṉ kāytalāl
iṟṟavaṉ, aṉṟu toṭṭu iṉṟukāṟum tāṉ
nal tavam iyaṟṟi, av aṉaṅkaṉ, nal urup
peṟṟaṉaṉām 'eṉap peyarttum eṇṇuvāḷ.