கம்பராமாயணம் 2829 · ஆரணிய 5.15

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வில்மலை வல்லவன் வீரத் தோளொடும் கல் மலை நிகர்க்கல - வில்லால் போர் செய்ய வல்லவனாம் இவனுடைய வீரம் பொருந்திய தோள்களோடும் வெறும் கல்லால் அமைந்த மலைகள் ஒப்பு ஆகா; கனிந்த நீலத்தின் நல் மலை அல்லது - முதிர்ந்த நீல ரத்தின மயமான அழகிய மலை அல்லாமல், நாம மேருவும் பொன் மலை ஆதலால் பொருவலாது என்பாள் - புகழ்மிக்க மேரு மலையும் பொன்மயமான மலை ஆதலின் ஒப்பாகாது எனச் சூர்ப்பணகை சொல்லுவாள்.

மலை வல்லவன் - மலைதலில் வல்லவன். மலைய எனும் செயவென் எச்சம் தொக்கு நின்றது என்பர். மலை என்பதனை முதனிலைத் தொழிற் பெயராகவும் கொள்வர். மலை வில் என மாற்றி மலை போன்ற வலிய பெரிய வில் எனவும் கொள்வர். இவன் தோளுக்குக் கல் மலையும், பொன் மலையும் வலிமையாலும் நிறத்தாலும் ஒப்பாகா. இந்திர நீல மலையே ஒப்பாகும். நாமம் - புகழ், பெருமை. அச்சத்தையூட்டும் மலை எனினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With the heroic shoulders of this man skilled in fighting with the bow
  2. mountains of mere stone cannot compare; except a fine mountain
  3. of ripe sapphire, nothing will do; even famous Mēru,
  4. being a mountain of gold, is no match,' she says.

What the poem says

Irāmaṉ's shoulders are next. No ordinary rocky mountain can match their strength, and even famous Mount Mēru will not do, for it is gold and his shoulders are dark. Only a mountain of deep blue sapphire could be compared to them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vil malai vallavaṉ vīrat tōḷoṭum
kalmalai nikarkkala; kaṉinta nīlattiṉ
nal malai allatu, nāma mēruvum
poṉmalai ātalāl, poruvalātu 'eṉpāḷ.