கம்பராமாயணம் 283 · பால 5.115

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்புழி வள்ளுவர் யானை மீமிசை நன்பறை அறைந்தனர் - என்று மன்னர் பிரான் கட்டளையிட்டபோது வள்ளுவர் யானை மேலிருந்து அரசன் கூறியபடி பறை நன்கு சாற்றினர்; நகர மாந்தரும் - (இதனைக் கேட்டு) நகர மக்களும்; மின்பிறழ் நுசுப்பினர் தாமும் - மின்னலைப் போன்ற இடையை உடைய பெண்களும்; விம்மலால் இன்பம் என்று அளக்க அரும் அளக்கர் எய்தினார் - பெருங்களிப்பால் இன்பம் என்று சொல்லப்படும் அளக்க முடியாத கடலை அடைந்தனர்.

என்புழி: என்றபோது. 'உழி' ஏழனுருபு காலம் உணர்த்திற்று. வள்ளுவர்: தோற்கருவி கொண்டு பறை சாற்றுபவர். அரசனது உள்படு கருமத் தலைவர் இவரென்பர். யானை மேல் அமர்ந்து பறை முழக்கிச் செய்தியை அறிவிக்கும் உரிமை உடையவர்கள். மீமிசை: அடுக்கி வந்த ஏழனுருபு; மிக மேலே என்பதைக் குறிக்கும். நன்பறை: நல்லபறை. எதுகை நோக்கி 'ல்' என்பது 'ன்' ஆகத் திரிந்தது. பிறழ்: உவம உருபு. நுசுப்பு: இடை. விம்மல்: களித்தல். அளக்கர்: கடல். மன்னன் கூறிய செய்தியை மக்களுக்கு, வள்ளுவர் யானைமேல் அமர்ந்து பறையறைந்து தெரிவித்தனர். அது கேட்டு நகரத்து மக்களும் பெண்களும் பெரு மகிழ்ச்சியால் அளப்பதற்கு அரிய இன்பக் கடலை அடைந்தனர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he said this, the heralds, high on elephants,
  2. beat the good drum; and the people of the city
  3. and the women whose waists flash like lightning, swelling with joy,
  4. reached the measureless ocean called delight.

What the poem says

The royal heralds (vaḷḷuvar), who had the right to announce the king's word from elephant-back, beat their drums and proclaim the decrees. The whole city, men and women alike, is plunged into a boundless sea of happiness.

The women's slender waists are compared to lightning, a stock image.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉpuḻi, vaḷḷuvar yāṉai mīmicai
naṉpaṟai aṟaintaṉar; nakara māntarum,
miṉ piṟaḻ nucuppiṉārtāmum, vimmalāl
iṉpam eṉṟu aḷakka arum aḷakkar eytiṉār.