கம்பராமாயணம் 2841 · ஆரணிய 5.27

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் , நின்றனள் , புழுங்கும் நெஞ்சினள் ,
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் , பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் .

பொருள் · Meaning in Tamil

வான்தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் போன்றனள் - ஆகாயத்தில் தீட்டியதொரு பெண் வடிவான சித்திரத்தை ஒத்து; புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள் - மனம் வாடி வெதும்பும் மனமுடையவளாய்; தோன்றல் தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள் ஊன்றினள் - இராமனின் ஒளி விளங்கும் அழகிய தோள்களில் தன் கண்களைப் பதிய வைத்தவளாய்; பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் - (அவற்றை) மீட்டிடத் தக்கதொரு வலிமை பெறாதவளாயினாள் (சூர்ப்பணகை).

நாட்டம் - கண். ஊற்றம் - ஊன்று கோல், பற்றுக் கோடு. இங்கு வன்மை எனும் பொருளில் வந்தது. மாதர் - காதல் எனும் பொருளும் உரைப்பர். அழகு எனவும் கொள்வர். ஓவியம் என்பது அசைவற்ற நிலையைச் சுட்டும். இவ்வாறு எண்ணும் நிலையில் கொடிய அரக்கி உருவில்தான் இருந்தாள் என்பதை இனி வரும் பாடலில் (2760) 'எயிறுடை அரக்கி, எவ் உயிரும் இட்டது ஓர் வயிறுடையாள்' என வருவதால் உணரலாம். இராமன் தோளில் பதித்த கண்ணை வாங்கும் வலிமை அற்றிருந்தாள். 'தோள் கண்டார் தோளே கண்டார்' (1081) என உலாவியற் படலத்தில் இராமனைக் கண்ட மகளிர் நிலை இத்துடன் ஒப்பிடற்பாலது.

ஊற்றம் - இலக்கணை. இப்பாடலில் இல்பொருளுவமை அணி அமைந்துள்ளது. சூர்ப்பணகை இராமனைக் கண்டு காமுற்று அவன் தன் மீது அன்பு கொள்ள இவ்வாறு அழகிய உருவம் தாங்கி வந்ததாக வான்மீகத்தில் இல்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the painted figure of a woman drawn upon the sky she stood;
  2. she withered, her heart burning within;
  3. on the bright, beautiful shoulders of the noble one she fixed her eyes
  4. and found no strength to tear them away.

What the poem says

Cūrppaṇakai stands motionless, like a woman painted on the sky, a comparison with something that cannot exist. Her eyes are fixed on Irāmaṉ's shoulders and she cannot pull them away. This recalls the women of Mithilā who, seeing Irāmaṉ earlier in the epic, "saw his shoulders and saw only his shoulders."

At this point she still has her own fearsome demon form. Taking on a lovely form to win Irāmaṉ, as she does in the next verses, is Kampaṉ's addition and is not in Vālmīki.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉtaṉil varaintatu ōr mātar ōviyam
pōṉṟaṉaḷ, pularntaṉaḷ, puḻuṅkum neñciṉaḷ,
tōṉṟaltaṉ cuṭar maṇit tōḷil nāṭṭaṅkaḷ
ūṉṟiṉaḷ, paṟikka ōr ūṟṟam peṟṟilaḷ.