கம்பராமாயணம் 2870 · ஆரணிய 5.56

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரிசிலை வடித்த தோளான் - (சூர்ப்பணகை கூறிய மொழிகளைக் கேட்டபின்) கட்டுக்கள் அமைந்த வில் தொழில் பயின்ற தோளை உடைய இராமன்; நிருதர்தம் அருளும் பெற்றேன் - அரக்கர்களின் அருளையும் அடைந்தேன்; நின் நலம் பெற்றேன் - உன்னை அடையும் நன்மையும் அடைந்தேன்; நின்னொடு ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் - உன்னோடு எக்காலத்தும் நீங்காத பெரும் செல்வத்தை நீங்காது எப்போதும் நிலைத்திருக்கவும் அடைந்தேன், ஒன்றோ - இது மட்டுமா?; திருநகர் தீர்ந்த பின்னர் செய்தவம் பயந்தது - அழகிய அயோத்தியை நான் நீங்கிய பிறகு நான் செய்த தவத்தின் பயனாய் விளைந்தது போலும்; என்னா வாள் எயிறு இலங்க நக்கான் - என்று சொல்லி ஒளியுள்ள தன் பற்கள் புலப்படச் சிரித்தான்.

நலம் - அழகும் ஆம். 'சிலைவடிப்ப வீங்கி விரையெனத் திரண்ட தோளான்' என்ற சீவக சிந்தாமணித் (1450) தொடருக்கு நச்சினார்க்கினியர் 'வில்லைப் பயிற்றுதலாற் பெருத்துத் திரண்ட தோளான்' என்று எழுதும் உரை ஒப்பிடற்குரியது. வரிகளாய் சிலைத் தழும்பு உண்டானதென்றும் கூறலாம். அரக்கர் அருளும், அருஞ் செல்வமும், அவள் நலமும் பெறுமாறு தான் செய்த முன்னைய தவம் பலித்தது என எதிர் மறையில் இகழ்ச்சியுற நகைத்தான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I have won the favour of the demons; I have won your beauty; with you
  2. I have won a life forever in wealth that never leaves; is that all?
  3. The penance I did since leaving the holy city has borne fruit," said
  4. he whose shoulders were shaped by the banded bow, and laughed, his bright teeth flashing.

What the poem says

Irāmaṉ answers with open irony. He lists everything she has offered: the demons' goodwill, her beauty, endless wealth. Then he says his penance since leaving Ayōttī must have borne fruit after all.

He means the opposite of every word, and he laughs so that his teeth flash. The poet describes him as a man whose shoulders have grown strong from drawing the bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nirutartam aruḷum peṟṟēṉ; niṉ nalam peṟṟēṉ; niṉṉōṭu
oruva aruñ celvattu yāṇṭum uṟaiyavum peṟṟēṉ; oṉṟō?
tiru nakar tīrnta piṉṉar cey tavam payantatu 'eṉṉā,
vari cilai vaṭitta tōḷāṉ vāḷ eyiṟu ilaṅka nakkāṉ.