கம்பராமாயணம் 2872 · ஆரணிய 5.58

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி , உருவம் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்கல் , நோக்கி ,
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள் .

பொருள் · Meaning in Tamil

ஊன் சுட உணங்கு பேழ்வாய் உணர்வு இலி - தன் உடலை (காமத் தீ) எரிக்க அதனால் வாடிய பெரிய வாயையுடைய நல்லுணர்வில்லாத சூர்ப்பணகை; உருவில் நாறும் வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடைவயங்க நோக்கி - (சீதையின் வடிவிலிருந்து) வெளித் தோன்றும் பெருஞ்சுடர் ஒளி மயமான பெருக்காக வந்து அவ்விடம் விளங்க அதனைப் பார்த்து; மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் - விண்மீன்கள் ஒளிரும் வானமும் நில உலகும் பரவிய போர் செய்யும் கொடிய இராக்கதர் எனும்; கான்சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள் - காட்டை அழிக்கப் பிறந்த கற்பு என்னும் தீயாகிய சீதையைத் தன் கண்முன் (வரப்) பார்த்தாள்.

ஊன்சுட உணங்கு பேழ்வாய் - தசையைப் பதம் செய்து உண்பதற்குப் பதைக்கிற திறந்த வாய் எனவும் கூறுவர். தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதாத சூர்ப்பணகையை 'உணர்விலி' என்றார். அரக்கர் குலத்தை அழிக்க வந்த சீதையைச் 'சோதி வெள்ளம்' என்றும் 'கற்பின் கனலி' எனவும் சுட்டினார். இத்துடன் 'பொன்னின் ஒளி, மின்னின் எழில் அன்னவள் தன் ஒளி' எனக் கோலங் காண் படலத்தில் சீதையை வருணித்ததை (1144) ஒப்பிடுக. மேலும் கற்புக்கனலி என்பதைக் காட்டும் வகையில் சூடாமணிப் படலத்தில் (5403) 'அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக, சனகி எனும் ஒரு தழல்' என்பதையும் ஒப்பிட்டுக் காணலாம். உணர்விலிக்குச் சோதி வெள்ளமாய்க் கனலியாய்த் தென்பட்டாள் சீதை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The senseless one with the gaping mouth, her body parched by burning desire,
  2. gazed at the flood of radiant light streaming from that form and filling the place,
  3. and with her own eyes she saw the fire of chastity, born to burn up the forest
  4. of warring demons spread over the starry sky and the earth.

What the poem says

Cūrppaṇakai, burning with lust, has no fellow-feeling for any creature and is called "senseless". She sees Cītai as a flood of light. To the reader Cītai is also a fire of chastity, born to burn down the whole forest of demons that spreads over heaven and earth.

The image of Cītai as a flame that will consume the demons returns later in the epic. Some read the first line as a mouth that gapes for meat to roast and eat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṉ cuṭa uṇaṅku pēḻ vāy uṇarvu ili, uruvil nāṟum
vāṉ cuṭarc cōti veḷḷam vantu iṭai vayaṅka, nōkki,
mīṉ cuṭar viṇṇum maṇṇum virinta pōr arakkar eṉṉum
kāṉ cuṭa muḷaitta kaṟpiṉ kaṉaliyaik kaṇṇiṉ kaṇṭāḷ.