கம்பராமாயணம் 2875 · ஆரணிய 5.61

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொரு திறத்தானை நோக்கி - போரில் வல்லமை பெற்ற இராமனைப் பார்த்து; பூவையை நோக்க நின்றாள் - சீதையைக் கண்டு வியந்து நின்ற சூர்ப்பணகை; கருத மற்று இனி வேறு இல்லை - எண்ணிப் பார்க்க இனிமேல் வேறொன்றும் இல்லை; (யாதெனில்) கமலத்துக் கடவுள் தானே - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும்; ஒருதிறத்து உணர நோக்கி - ஒப்பற்ற வகையில் ஆழ்ந்து நினைத்துப் பார்த்து; உருவினுக்கு உலகம் மூன்றின் - ஏற்ற வடிவத்திற்கு இம் மூன்று உலகங்களிலும்; இவர் இருவர் இருதிறத்தார்க்கும் செய்த வரம்பு என்றாள் - இவர்கள் இருவரும் ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலர்க்கும் உண்டாக்கிய எல்லை ஆம் என எண்ணினாள்.

பூவை - நாகணவாய்ப் புள் போன்ற சொல்லையுடைய சீதை, ஆண் பெண் ஆகிய இரு வடிவத்தார்க்கும் பிரமன் படைத்த வரம்பாக இராமனும் சீதையும் அமைந்துள்ளனர். 'படைக்குநர் சிறுமை அல்லாமல் எண்பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம்' என முன்னர்க் (2791) காட்டியதற்கிணங்க 'வரம்பு இவர் இருவர்' என்றார்.

பூவை - உவமை ஆகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She looked at the mighty warrior, and stood gazing at the woman like a pūvai bird;
  2. "There is nothing more to consider; the god of the lotus himself,
  3. having pondered deeply and with singular care, has made these two
  4. the very limit of form for both kinds, in all three worlds," she said.

What the poem says

Looking from Irāmaṉ to Cītai, Cūrppaṇakai concludes that Brahmā, the creator seated on the lotus, has made these two the furthest limit of beauty, he for men and she for women, in all three worlds.

Cītai is called a pūvai, the mynah, for her sweet voice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'poru tiṟattāṉai nōkka pūvaiyai nōkki, niṉṟāḷ;
karuta maṟṟu iṉi vēṟu illai; kamalattuk kaṭavuḷtāṉē,
oru tiṟattu uṇara nōkki, uruviṉukku, ulakam mūṉṟiṉ
iru tiṟattārkkum, ceyta varampu ivar iruvar 'eṉṟāḷ.