கம்பராமாயணம் 2877 · ஆரணிய 5.63

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வரும் இவள் , மாயம் வல்லள் ; வஞ்சனை அரக்கி ; நெஞ்சம்
தெரிவு இலம் ; தேறும் தன்மை , சீரியோய் ! செயல் இது அன்றால் ,
உரு இது மெய்யது அன்றால் ; ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென் ; எய்திடாமல் விலக்குதி , வீர ! என்றாள் .

பொருள் · Meaning in Tamil

சீரியோய்! வீர! - நற்பண்பும் செய்கையும் உடையவனே! வீரனே!; வரும் இவள் மாயம் வல்லள் - (உன்னிடம்) வரும் இப்பெண் மாயையில் தேர்ச்சி பெற்றவள்; வஞ்சனை அரக்கி - வஞ்சகத் தன்மை கொண்ட இராக்கதப் பெண் ஆவாள்; நெஞ்சம் தெரிவு இல - இவள் எண்ணங்கள் அறிய முடியாதவை; தேறும் தன்மை செவ்விது அன்று - இவளை நல்ல பெண் எனத் துணியும் இயல்பு நல்லது அன்று; உரு இது மெய்யது அன்று - இவள் கொண்ட இவ் அழகிய உருவமும் உண்மை அன்று; ஊன் நுகர் வாழ்க்கையாளை வெருவினென் - தசையை உண்டு வாழும் வாழ்க்கையையுடைய இவளைக் கண்டு அஞ்சினேன்; எய்திடாமல் விலக்குதி என்றாள் - அருகே வராமல் இவளைத் தடுத்து அப்பால் செலுத்துவாய் எனக் கூறினாள்; ஆல் - அசை.

முன்னரே சூர்ப்பணகையை 'மெய் இலாள்' (2774) என்றும் 'பொய்ம் மகள்' (2778) என்றும் கூறியதற்கேற்ப இங்குச் சீதையையே இராமனிடம் மாயம் வல்லள், வஞ்சனை அரக்கி, ஊன் நுகர் வாழ்க்கையாள் எனப் பொய்யாகச் சூர்ப்பணகை பழி கூறுகின்றாள். தன்னை இராமன் 'எயிறுடை அரக்கி, எவ்வுயிரும் இட்டது ஓர் வயிறுடையாள் என மறுக்கும்' என (2760) எண்ணித் தன் வடிவை மாற்றிக் கொண்ட 'வஞ்சமகள்' (2762) சூர்ப்பணகை ஆதலால் சீதையை அவ்வாறு கூறி இராமன் வெறுக்குமாறு செய்ய வழி காண்கிறாள். மேலும் அஞ்சுகிற பெண்களுக்கு அபயம் கொடுப்பதே வீரரின் பண்பாகும். எனவே இராமனை 'வீர' என விளிக்கிறாள். 'சீரியோனாம்' இராமன் மெய்யில் உருவு கொண்டவளை நல்லவள் எனக் கொள்வது அவன் பண்புக்கு ஏற்றதன்று எனவும் குறிப்பால் சுட்டுவாள்.

வெருவினென் - இறந்த கால வினைமுற்று நிகழ்காலப் பொருளில் வந்தது, கால வழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "This woman who comes is skilled in magic; a deceitful demoness; her heart
  2. cannot be read; to trust her, noble one, is not wise;
  3. this form of hers is not real; I am afraid of her, whose life
  4. is feeding on flesh; keep her from coming near, hero!" she said.

What the poem says

Seeing Cītai approach, Cūrppaṇakai turns her own deceptions against her rival. She warns Irāmaṉ that this woman is a shape-shifting demoness, that her lovely form is a disguise, and that she lives on flesh.

Every charge she makes is true of herself. She took on her beautiful form precisely because she feared Irāmaṉ would reject her true demon shape. She calls him "hero" because it is a hero's duty to protect a frightened woman.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varum ivaḷ, māyam vallaḷ; vañcaṉai arakki; neñcam
terivu ila; tēṟum taṉmai, cīriyōy! cevvitu aṉṟāl,
uru itu meyyatu aṉṟāl; ūṉ nukar vāḻkkaiyāḷai
veruviṉeṉ; eytiṭāmal vilakkuti, vīra! eṉṟāḷ.