கம்பராமாயணம் 2906 · ஆரணிய 5.92

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தனி இருந்தனள் ; சமைந்தது என் சிந்தனை ; தாழ்வுற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் 'என , எண்ணாத்
துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் ;
கனி இரும் பொழில் , காத்து அயல் இருந்தவன் கண்டான் .

பொருள் · Meaning in Tamil

தனி இருந்தனள் - (நான் வந்த இப்பொழுதில்) இவள் தனியளாக உள்ளாள்; என் சிந்தனை சமைந்தது - என் எண்ணம் பலித்தது; தாழ்வுற்று இனி இருந்தது எனக்கு எண்ணுவது இல் என எண்ணா - காலம் தாமதித்து இனிமேல் இங்கு இருந்து எனக்கு வேறு செயல் பற்றி நினைக்க வேண்டியது இல்லை என நினைத்து; துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் - வெறுப்புடைய கொடிய வன்னெஞ்சினளாம் சூர்ப்பணகை மயில் போன்ற சீதையைப் பிடித்தற்குப் பின் தொடர்ந்தாள்; கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான் - பழங்கள் நிறைந்த பெரிய சோலையில் சீதையைக் காத்து அருகிலிருந்த இலக்குவன் (அதனைப்) பார்த்தான்.

சமைந்தது - தன் காரியம் கை கூடியது என உறுதியாக எண்ணிய துணிவைக் காட்டும். சீதையிடத்துச் சூர்ப்பணகை வெறுப்புற்றதற்குக் காரணம் அவளருகில் இருப்பதால் இராமன் தன்னை விரும்பான் என எண்ணியதாகும். இதனை முன்னர்ப் 'படியிலாள் மருங்குள்ள அளவு எனை அவன் பாரான்' (2821) என்ற எண்ணத்தில் வெளிப்பட்டது. 'எனக்கு எண்ணுவது இல்' எனத் தன் மீது கொண்ட மிகுந்த நம்பிக்கை இலக்குவன் இருந்ததை அவள் பாராத பிழையால் எல்லாச் செயலும் நிறைவேறாது குலைந்து போனது. எனவே அவள் பிழை நிலை புலப்படும்.

சமைந்தது - எதிர்காலத்தில் அமைய வேண்டியது இறந்த காலத்தில் வந்ததால் கால வழுவமைதி. தோகை - உவமையாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "She is alone; my plan has come right; delaying here
  2. there is nothing more for me to think about," she reasoned,
  3. and she of hard heart full of hatred went after the peahen;
  4. he who sat guarding nearby in the grove rich with fruit saw her.

What the poem says

Seeing Cītai apparently alone, Cūrppaṇakai is sure her plan has succeeded and goes after her without another thought. Cītai is called a peahen for her grace.

Her confidence is her undoing. Ilakkuvaṉ, guarding Cītai from the fruit grove nearby, has seen everything.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉi iruntaṉaḷ; camaintatu eṉ cintaṉai; tāḻvuṟṟu
iṉi iruntatu eṉakku eṇṇuvatu il 'eṉa, eṇṇā
tuṉi irunta val maṉattiṉaḷ tōkaiyait toṭarntāḷ;
kaṉi irum poḻil, kāttu ayal iruntavaṉ kaṇṭāṉ.