கம்பராமாயணம் 293 · பால 5.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே - நீலோற்பல மலரையும் இடையே ஒளிரும் தாமரைகளும் எனுமாறு; ஓவிய எழில் உடை ஒருவனை - ஓவியம் போன்ற அழகுடைய ஒப்பற்ற ஒருவனாகிய ராமனை; அலதோர் ஆவியும் உடலும் இலதென - அல்லது வேறு உயிரும், உடலும் தனக்கு இல்லை எனும்படி நினைத்து; உலகுடைய வேந்தர்தம் வேந்தன் - உலகனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆளும் மன்னர் மன்னனான தயரதன்; அருளின் மேவினன் - அருள் உடையவனாய் வாழ்ந்திருந்தான்.
'காவி' ராமனது மேனியின் நிறத்துக்கும், 'கமலம்' முகம், கண், கை போன்ற பிற உறுப்புகளுக்கும் உவமையாயிற்று. ஓவிய எழில்: சித்திரத்தில் எழுதி வைக்கப்பட்டது போன்ற அழகு. ஒருவன்: ஒப்பற்றவன். ஆவியும் உடலும் என்பதனை உலகுக்கு ஏற்றி உரைத்தலும் பொருந்தும்.
உலகாளும் மன்னனான தயரதன் புதல்வர் நால்வரில் மூத்த குமாரரான ராமபிரானிடத்தில் மிகுந்த அன்புடையவனாயிருந்தான் என்பது கருத்து. அருளின் மேவினன்: பேரன்புடையவனாயிருந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As though with a dark water lily and shining lotuses,
- except for the one who had the beauty of a painting, he had
- neither life nor body, so he felt; in his love
- the king of kings who held the world dwelt thus.
What the poem says
Tacarataṉ loves all four sons, but Irāmaṉ above all; he feels he has no life or body apart from him.
Irāmaṉ is like a painting: his dark body like the blue water lily (kāvi), his face, eyes and hands like lotuses.