கம்பராமாயணம் 2930 · ஆரணிய 5.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரிந்து ஆய கூந்தலாள் - விரிந்துள்ள கூந்தலை உடைய அவள்; வெய்ய வினை யாதானும் புரிந்தாள் என்பது - கொடிய செயல் ஏதேனும் செய்தாள் என்பதை; தனது பொரு அரிய திருமனத்தால் தெரிந்தான் - (இராமன்) தன் ஒப்பற்ற சிறந்த உள்ளத்தால் அறிந்தான்; இன்று இளையானே இவளை - இப்போது தன் தம்பியாம் இலக்குவனே இவளை; நெடுஞ் செவியொடு மூக்கு அரிந்தான் என்பதும் உணர்ந்தான் - நீண்ட காதுடன் மூக்கையும் அறுத்தான் என்பதையும் அறிந்தான்; (அதன்பின்) அவளை நீ யார் என்றான் - சூர்ப்பணகையைப் பார்த்து, நீ யார்? எனக் கேட்டான்.
விரிந்த கூந்தல், சூர்ப்பணகையின் அவல நிலையைக் காட்டுகிறது. வெய்ய வினை - பிறர்க்குத் தீங்கு செய்யும் கொடிய செயல். இராமன் எதையும் பிழையின்றி உணரும் மனம் பெற்றவன் என்பதைப் 'பொரு அரிய திருமனம்' என்பது காட்டும் - அந்த அரக்கிக்கு இத்தகைய செயல் செய்திருப்பவன் இலக்குவன் என்றும் அவள் பிறர்க்கு யாதேனும் தீமை செய்ய விருந்ததைத் தடுக்கவே இலக்குவன் இச் செயல் செய்திருப்பான் என்றும் எண்ணிய இராமனின் உள்ளம் நன்கு தன் தம்பியர் மீது கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்துகிறது. எனினும் புதியதாகச் சூர்ப்பணகையைக் காண்பவன் போன்று 'நீ யார்?' எனக் கேட்டான். காமவல்லி உருவம் மாறியிருந்ததால் இவ்வாறு கேட்டான் எனலுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That the woman with loosened hair had done some cruel deed
- he knew with his matchless, holy mind;
- he understood too that today his younger brother had cut off
- her long ears and her nose; and he asked her, "Who are you?"
What the poem says
Irāmaṉ understands at once. Her loose, dishevelled hair shows her distress. He guesses she must have tried to do something cruel, and that Ilakkuvaṉ has punished her by cutting off her ears and nose, and he trusts that his brother would only have done so to stop her doing harm.
All the same he asks her, as if she were a stranger, "Who are you?" Her lovely disguise is gone, so in a sense she is a stranger now.