கம்பராமாயணம் 2936 · ஆரணிய 5.122

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பாமுன் - வளைந்த கட்டமைந்த வில்லுடைய இலக்குவன் இவ்வாறு சொல்லி முடிக்குமுன்; இகல் அரக்கி - பகைமை கொண்ட அரக்கியாம் சூர்ப்பணகை, சூல் தவளை தன் கணவன் அருகு சேற்றவளை இருப்ப - கருவுற்ற பெண் தவளை தன் கணவனாம் ஆண் தவளை அருகே சேற்றில் ஒரு சங்கு தங்கியிருக்க; சினம் திருகி நீர் உழக்கும் துறை கெழு நீர்வள நாடா! - கோப முதிர ஊடல் கொண்டு நீரைக் கலக்கும் நீர்த்துறை பொருந்திய நீர் நிலைகளால் வளம் பெற்ற நாட்டையுடையவனே!; மாற்றவளைக் கண்டக்கால் மனம் அழலாதோ என்றாள் - தன் கணவனின் மற்றொரு மனைவியைக் கண்டால் மனம் எரியாதோ எனக் கேட்டாள்.

ஏற்ற வரிசிலையோன் - மேலும் சூர்ப்பணகை தீச் செயல் புரிய நினைத்தால் அவள் மேல் அம்பு எய்யப் பூட்டிய வில்லுடைய இலக்குவன் எனலுமாம். சூல்தவளை சங்கோடு சினக்கும் என நாட்டு வளம் கூறும்போது அஃறிணை உயிர்களே தன் கணவன் அருகே பிற பெண்ணிருக்கச் சினக்கும் போது, தான் விரும்பும் இராமன் அருகே மாற்றாளாய் ஒருத்தி நிற்கக் கண்டு சினவாமல் இருக்க இயலுமா எனக் குறித்துக் கேட்கிறாள் சூர்ப்பணகை.

இந்நாட்டு வள வரிகளைச் சங்கப் பாடலில் காணும் 'புழற் காலாம் பலகலடை நீழற் கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுகயேற்றை நாகின வளையொடு பகன் மணம் புகூஉம் நீர்திகழ் கழனிநாடு' (புறம் 266-3-6) வரிகளுடன் ஒப்பிடலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the bearer of the strung, banded bow had finished speaking, the fierce demoness said,
  2. "Lord of a land rich in waters, with ghats where the pregnant frog,
  3. seeing a conch lying in the mud beside her mate, flares up in anger
  4. and churns the water! If one sees a rival wife, will not the heart burn?"

What the poem says

Cūrppaṇakai interrupts Ilakkuvaṉ to justify herself. In Irāmaṉ's own fertile kingdom, she says, even a pregnant frog is said to churn the water in jealousy when she sees a conch lying near her mate in the mud.

If a frog feels jealous of a rival, how could she not burn at the sight of another woman beside the man she loves? She is still treating Cītai as a rival wife.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟṟa vaḷai vari cilaiyōṉ iyampāmuṉ, ikal arakki,
'cēṟṟa vaḷai taṉ kaṇavaṉ aruku iruppac ciṉam tiruki
cūl tavaḷai, nīr uḻakkum tuṟai keḻu nīr vaḷa nāṭā!
māṟṟavaḷaik kaṇṭakkāl aḻalātō maṉam? 'eṉṟāḷ.