கம்பராமாயணம் 2943 · ஆரணிய 5.129

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குலத்தாலும் - பிறந்த உயர் குலச்சிறப்பாலும், நலத்தாலும் - நன்மை தரும் பண்பாலும், குறித்தனவே கொணர்தக்க வலத்தாலும் - நீங்கள் குறிப்பிட்ட பொருளைக் கொண்டு வந்து தரவல்ல ஆற்றலாலும், மதியாலும் - அறிவாலும், வடிவாலும் - உருவ அழகாலும், மடத்தாலும் - பெண்ணிற்குரிய மடமைப் பண்பாலும்; நிலத்தாரும் - மண்ணுலக மக்களும்; விசும்பாரும் - விண்ணுலகத் தேவரும்; என்னைப் போல் நேரிழையார் - என்னைப் போன்ற பெண்கள்; சொலத் தான் இங்கு உரியாரை வல்லீரேல் சொல்லீரோ - ஒப்பாகச் சொல்வதற்கு இங்கு உரிய பெண்களை நீங்கள் சொல்ல ஆற்றலுடையவர்களாயின் சொல்லுவீரோ? (சொல்ல முடியாது) தலை மக்களின் பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே, என்ற தொல்காப்பிய நூற்பா (தொல். பொருள். மெய்ப்பாட்டு. 25) இங்கு ஒப்பிடத்தக்கது. ஆயின் இது சூர்ப்பணகையின் தற்புகழ்ச்சி குறித்து உண்மைக்கு எதிராக முரண்பட அமைந்துளது. மடம் - மென்மை, 'தெளிநடை மடப்பிணை' (புறம். 23) என இப்பொருளில் வந்துளது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற பெண்களுக்குரிய நான்கு உயர்வான பண்புகளில் இஃதும் ஒன்றாம். மடம் - மேன்மை எனவும் உரைப்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In lineage, in goodness, in the strength to bring whatever is named,
  2. in wisdom, in beauty and in gentle innocence,
  3. among those on earth and those in heaven, women with fine jewels like me,
  4. can you name any here fit to be compared with me, if you are able?

What the poem says

Cūrppaṇakai goes on praising herself. She challenges Irāmaṉ to name any woman, on earth or in heaven, who equals her in birth, virtue, power, intelligence, beauty and womanly gentleness.

The commentary notes that the list echoes the classical grammar's list of qualities that make a couple well matched, but here it is turned into empty self-praise that runs against the truth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kulattālum, nalattālum, kuṟittaṉavē koṇartakka
valattālum, matiyālum, vaṭivālum, maṭattālum,
nilattārum, vicumpārum, nēriḻaiyār, eṉṉaippōl
colattāṉ iṅku uriyāraic collīrō, vallīrēl?