கம்பராமாயணம் 2946 · ஆரணிய 5.132

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிவனும் - சிவபெருமானும், மலர்த்திசை முகனும் - தாமரை மலர் மீது இருக்கும் பிரமனும், திருமாலும் - மகாவிட்டுணுவும், தெறு குலிசத்து அவனும் - பகைவரை அழிக்கும் வச்சிரப் படையுடைய இந்திரனும்; அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே - சேர்ந்து ஒன்றாகி நின்றது போன்ற அழகிய உருவம் உடையவனே; புவனம் அனைத்தையும் ஒருதன் பூங்கணையால் உயிர் வாங்கும் அவனும் - உலகங்கள் எல்லாவற்றையும் ஒப்பற்ற தன் மலர் அம்புகளால் எல்லா உயிர்களையும் வருத்தும் அம் மன்மதனும்; இவனே போல் அருள் இலனால் உனக்கு இளையானோ - உன்தம்பி இலக்குவனைப் போல இரக்கமற்றவனாய் இருப்பதால் அவனும் உனக்குத் தம்பியோ?

சிவன் அழிவுக்கும், பிரமன் படைப்பிற்கும், திருமால் காப்பிற்கும் உள்ளது போல் இராமன் முத்தொழிலும் ஒருங்கே செய்யும் முதல்வன் போல் விளங்குவதை இப்பாடல் சுட்டும். மன்மதன் பெண்களிடம் அன்பின்றி அவர்களைக் காம நோயால் துன்புறுத்துவது போன்று இலக்குவனும் தன் உறுப்புகளை அறுத்துத் துன்பம் செய்தான் என்பது சூர்ப்பணகை கொண்ட பொருளாம். மன்மதனின் ஐம் பூங் கணைகளில் நீல மலர் உயிரைக் கொல்லும் ஆற்றலுடையது.

இராமனை விளித்து இலக்குவனின் குறையைக் கூறுகின்றாள் சூர்ப்பணகை. 'க்கரியமூக்கு' எனத் தொடங்கும் பாடலிலிருந்து (2850) 'விண்டாரே' என்பது வரை (2862) பன்மையில் விளித்து இங்கு ஒருமையைப் பயன்படுத்தியுள்ளமை எண்ணுதற்குரியது. இவற்றுள் சில இருவரையும் சில இராமனையும் குறிப்பனவாக உள்ளன. ஓகாரம் வினா: ஏகாரம் பிரிநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O you whose form is as if Civaṉ, the four-faced one on the flower, Tirumāl,
  2. and he of the smiting thunderbolt had joined and stood as one!
  3. He who takes the life of all the worlds with his single flower arrow,
  4. is he too your younger brother? For he is as pitiless as this one.

What the poem says

Cūrppaṇakai now addresses Irāmaṉ alone, in the singular, as if Civaṉ, Piramaṉ, Tirumāl and Intiraṉ had merged into one figure, so that he seems to hold all the divine powers of creating, protecting and destroying.

She then asks bitterly whether Kāmaṉ, the love god whose flower arrows torment every living being, is also his younger brother, since he is as merciless as Ilakkuvaṉ. Love is wounding her as surely as Ilakkuvaṉ's sword did.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'civaṉum, malart ticaimukaṉum, tirumālum, teṟu kulicattu
avaṉum, aṭuttu oṉṟāki niṉṟaṉṉa uruvōṉē!
puvaṉam aṉaittaiyum, oru taṉ pūṅ kaṇaiyāl uyir vāṅkum
avaṉum, uṉakku iḷaiyāṉō? ivaṉē pōl aruḷ ilaṉāl.