கம்பராமாயணம் 2951 · ஆரணிய 5.137

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

நெறித்தாரை செல்லாத நிருதர் - நல்லொழுக்க வழியில் போகாத அரக்கர்களுடைய; எதிர் நில்லாதே - எதிரில் நிற்காமல்; நெடிய தேவர் மறித்தார் - நீண்டகாலம் வாழ்ந்த தேவர்கள் தோற்று ஓடிப் போனார்கள்; ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது - இங்குள்ள இவர் இருவரும் மனிதர்கள் எனக் குறைவாகக் கருதாமல்; வல்லை ஆகின் - திறமை உடையவள் ஆனால், வெறித் தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் - மணமிக்க மாலை அணிந்த வேற்படையை உடைய இராக்கதர் வெற்றி பூண்ட இயட்சர்கள் முதலானவர்கள் - ஆகியோருள்: நீ மிடலோர் என்று குறித்தாரை - நீ வலிமையுடையோர் எனக் கருதியவர்கள்; யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் - எல்லோரையும் போரிட அழைத்து வந்தால் உன் முன்னே அவர்களைக் கொல்வோம், என்றான் - எனக் கூறினான் இராமன்.

அரக்கர் வழி அல்லாத வழி என்பதைச் சுட்ட 'நெறித்தாரை செல்லாத' என்றார். தேவரே தோற்கும் போது மனிதர் தாமே இவர் என மதிக்கமாட்டாள் என்ற குறிப்பு இதில் புலப்படுகிறது. இயக்கரைச் சுட்டியது குபேரன் இவள் தமயன் எனக் குறித்ததால். வெறி - என்பதற்கு புலால் நாற்றம் எனலுமாம். வெறித்தார்+ஐ+வேல்+அரக்கர் எனப் பிரித்து செருக்குற்றவரான அழகிய வேல் ஏந்திய இராக்கதர் எனவும் பொருள் கூறலாம்.

இராமனின் வீரவுரை சூர்ப்பணகையின் வீரர்குலப் பெருமைக்குரிய விடையாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The tall gods could not stand before the nirutas who walk no righteous path, and fled; here are these two,
  2. mere men": do not think so; if you are able,
  3. bring the rākṣasas with fragrant garlands and spears, the victorious yakṣas and the rest, all whom you
  4. count as mighty, every one of them, and we will slay them before your eyes," he said.

What the poem says

Irāmaṉ answers Cūrppaṇakai's boast about her mighty kin. She should not think that because the gods fled from the rākṣasas, two men can be ignored.

Let her bring every warrior she thinks powerful, rākṣasas and yakṣas alike, and the brothers will kill them in front of her. The yakṣas are named because their king Kupēraṉ is her half-brother. This heroic reply answers her pride in her warrior family.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'''neṟit tārai cellāta nirutar etir nillātē, neṭiya tēvar
maṟittār; īṇṭu ivar iruvar; māṉiṭavar '' eṉṉātu, vallai ākiṉ,
veṟit tārai vēl arakkar, viṟal iyakkar mutaliṉar, nī miṭalōr eṉṟu
kuṟittārai yāvaraiyum, koṇarutiyēl, niṉ etirē kōṟum 'eṉṟāṉ.