கம்பராமாயணம் 3020 · ஆரணிய 6.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆளியின் துப்பினாய் - யாளி போன்ற வலிமையுடையவனே!; விண்ணும் மண்ணும் - வானுலகத்து உயிர்களும், இம் மண்ணுலகில் வாழ்பவர்களும்; மீள அருஞ் செருவில் - வென்று திரும்பிச் செல்ல முடியாத போரில்; என் மேல் வந்தாலும் - என்னை எதிர்த்துத் திரண்டு வந்தாலும்; நாள் உலந்து அழியும் அன்றே - (அந்த வானுலக உயிர்களும் நிலவுலக உயிர்களும் ஆகிய யாவும்) என் முன்னே தம் ஆயுட் காலம் ஒழிந்து அழிந்திடுமல்லவா?; நான் உனக்கு உரைப்பது என்னே - இதைப் பற்றி நான் உனக்குச் சொல்ல வேண்டுவது உண்டோ? இவ் அமர் எனக்கு அருளி நின்று - (ஆதலால்) இந்தப் போரை எனக்கு நீ கொடுத்து; என் தோளினைத் - என் தோள்களை; தின்னுகின்ற சோம்பினை - வருத்துகின்ற சோம்பலை; துடைத்தி என்றான் - (நீ) போக்குவாய் என்று இலக்குவன் இராமனை நோக்கிக் கூறினான்.
'நான் உனக்கு உரைப்பதென்னே' என்றது உனக்குத் தெரிந்ததேயென வற்புறுத்தியவாறு. சோம்பு : போர்த் தொழிலில்லாமல் கிடக்கின்ற மந்த குணம். அடுத்த செய்யுளில் (2938) 'என்றனன் இளைய வீரன்' என்றதனால் இப் பாட்டிற்கு எழுவாய் இலக்குவன் என்பது அறியப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Even if heaven and earth came against me in a war none return from,
- would they not reach the end of their days and perish? What need have I to tell you?
- You with the strength of a yāḷi! Grant this battle to me,
- and wipe away the idleness that is eating at my shoulders," he said.
What the poem says
Ilakkuvaṉ pleads once more for the fight. Even if heaven and earth together attacked him, he says, they would all perish; Irāmaṉ knows this well.
So let Irāmaṉ, strong as a yāḷi, give this battle to him and cure the idleness that is eating away at his shoulders. The next verse confirms that Ilakkuvaṉ is the speaker.