கம்பராமாயணம் 3041 · ஆரணிய 6.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அப்பொழுது) அலை மிதந்தன - அலைகள் பொங்கி மேலெழுந்தனவாயின; குருதியின் பெருங்கடல் - அந்தப் பெரிய இரத்தக் கடலில்; அரக்கர் தலை மிதந்தன - அரக்கர்களின் தலைகள் மிதந்தன; நெடுந்தடி மிதந்தன - பெரிய தசைத் துண்டுகள் மிதந்தன, தடக்கைம் மலை மிதந்தன - பெரிய துதிக்கைகளையுடைய யானைகள் மிதந்தன; வாம் பரி மிதந்தன - தாவிச் செல்லும் குதிரைகள் மிதந்தன; வயப் போர்ச் சிலை மிதந்தன - வலிய போருக்குரிய விற்கள் மிதந்தன; கொடி நெடுந் தேர்கள் மிதந்தன - கொடிகளோடு நீண்ட தேர்கள் மிதந்தன.
அந்தப் போரில் இராமனின் கூரிய அம்புகள் உண்டாக்கிய இரத்தக் கடலில் அரக்கர் தலைகள் முதலாயின மிதந்தன என்பது. தும்பிக்கையுடைய யானையைக் கைம்மலை என்றார். மிதந்தன : சொற்பின்வருநிலையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Waves rose high on the great sea of blood; rākṣasas'
- heads floated; huge lumps of flesh floated; great-trunked
- hill-like elephants floated; leaping horses floated; mighty war
- bows floated; the tall chariots with their flags floated.
What the poem says
The blood has become a sea with waves, and everything floats on it: severed heads, chunks of flesh, elephants, horses, bows and tall chariots with their banners.
The verb 'floated' repeats through every phrase, a figure of word repetition.