கம்பராமாயணம் 32 · பால 2.12

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்
குண்டலக் கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றில்,
தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
வண்டல் இட்டு ஓடும் மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாது ஓ!

பொருள் · Meaning in Tamil

வெண்தளக் கலவைச் சேறும் - பச்சைக் கற்பூரம் கலந்த சாந்தும்; குங்கும விரை மென் சாந்தும் - குங்குமப் பூ முதலியன கலந்த சந்தனமும் பூசிய; குண்டலக் கோல மைந்தர் - குண்டலம் அணிந்த அழகிய ஆண்கள்; குடைந்த நீர்க் கொள்ளை - முழுகி நீராடிய அந்த வெள்ளப் பெருக்கை; சாற்றின் - சொல்லுவதாயின்; தண்டலைப் பரப்பும் - சோலைப் பரப்புகளிலும்; சாலி வேலியும் - நெற்பயிர் விளையும் வயல்களிலும்; தழீஇய வைப்பும் - அவற்றைச் சார்ந்துள்ள நிலப் பகுதிகளிலும்; வண்டல் இட்டு ஓடும் மண்ணும் - வண்டல் படியும்படி (நீர்) ஓடும் ஏனைய மண் பகுதிகளிலும்; மது கரம் மொய்க்கும் - வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும். ஆடவர் பூசிய நறுமணக் குழம்பும் சாந்தும் கொண்ட எங்கணும் பரவியிருப்பதால், மணத்தின் வழியே சென்று தேன் நாடும் வண்டுகள் பல இடங்களிலும் மொய்த்துக் கிடந்தன. அவை மணம் நுகர்ந்தனவேயன்றித் தேன் காணவில்லை. வெண்டாளம்: பச்சைக் கருப்பூரம் தழீஇய - சொல்லிசை அளபெடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The paste of white camphor blend and the soft sandal fragrant with saffron
  2. worn by handsome young men in earrings who plunged into the flood: if one speaks of that water,
  3. over the stretches of the groves, the paddy fields and the lands around them,
  4. and the soil where it runs and leaves its silt, the bees swarm everywhere.

What the poem says

As the women's hair scented the river in the previous verse, here the men's perfumes do the same. Handsome young men, wearing earrings and anointed with camphor paste and saffron-scented sandal, bathe in the flood and wash off their fragrance. The water carries it over groves, rice fields and every patch of land where it leaves its silt. Bees follow the scent and swarm everywhere, only to find perfume and no honey.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṇtaḷak kalavaic cēṟum, kuṅkuma virai meṉ cāntum
kuṇṭalak kōla maintar kuṭainta nīrk koḷḷai cāṟṟiṉ,
taṇṭalaip parappum cāli vēliyum taḻīiya vaippum
vaṇṭal iṭṭu ōṭu maṇṇum matukaram moykkum mātō!