கம்பராமாயணம் 3410 · ஆரணிய 8.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராமன் நிசிசரற்கு இடைந்து போய் - இராமன் அரக்கனுக்கு வலி ஒடுங்கிப், பின் வாங்கி; எவ்வம் வந்து அடைந்த போது அழைக்குமே - துன்பம் வந்து சேர்ந்த சமயத்தில் (பிறரைத் துணைக்குக்) கூப்பிடுவானோ? (மாட்டான்); அழைக்குமாம் எனின் - கூப்பிட நேருமானால்; மிடைந்த பேரண்டங்கள் மேல கீழன உடைந்துபோம் - நெருங்கிய பெரிய அண்டங்களெல்லாம் மேல் கீழனவாய் அழிந்து போய்விடும்; அயன் முதல் உயிரும் வீயும் - பிரமன் முதலான உயிர்களும் அழியும், ஆல் - ஈற்றசை.
இடைதல் - தோற்றுப்போதல் என்றுமாம். நிசிசரன் - இரவில் சஞ்சரிக்கும் அரக்கன். அண்டப் பெருவெளியில் பல்வேறு உலகங்கள் நெருங்கியிருப்பதை 'மிடைந்த' எனச் சுட்டினான். எவ்வம் - துன்பம். இராமன் எல்லா அண்டங்களிலுள்ள எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் கலந்துள்ளவன் என்பதை முதலில் கூறினான் இலக்குவன். அதனால் அவனுக்கு ஒரு தீங்கு நேரிடின் எல்லாம் அழிந்திருக்கும்; அவ்வாறு அழியாததால் இராமனுக்கு எந்தத் தீங்கும் வரவில்லை என்பதை உணர்த்தினானாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Would Irāmaṉ, giving way before a night-roaming demon,
- call out when trouble came upon him? If he were to call out,
- the great crowded universes above and below
- would shatter, and all life from Brahmā down would perish.'
What the poem says
Ilakkuvaṉ argues that Irāmaṉ would never retreat before a demon and cry out for help. If he ever were in such danger, the countless worlds would break apart and every living being, Brahmā included, would die.
Irāmaṉ lives inside and outside all things. Since the universe still stands, nothing can have happened to him.